பாடம்: 23
சத்தியங்களில் எண்ணம்(தான் கருத்தில் கொள்ளப்படும்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.
எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
அத்தியாயம்: 83
(புகாரி: 6689)بَابُ النِّيَّةِ فِي الأَيْمَانِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
Bukhari-Tamil-6689.
Bukhari-TamilMisc-6689.
Bukhari-Shamila-6689.
Bukhari-Alamiah-6195.
Bukhari-JawamiulKalim-6223.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ
3 . அப்துல்வஹ்ஹாப் பின் அப்துல்மஜீத்-அஸ்ஸகஃபீ
4 . யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ
5 . முஹம்மத் பின் இப்ராஹீம்-அத்தைமீ
6 . அல்கமா பின் வக்காஸ்-அல்லைஸீ
7 . உமர் பின் கத்தாப் (ரலி)
மேலும் பார்க்க: புகாரி-1.
சமீப விமர்சனங்கள்