தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

இறைச் செய்தி (வஹீ)யின் ஆரம்பம்.

முன்னோடி அறிஞரும், நபிமொழி மேதையுமான அபூஅப்துல்லாஹ்-முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் முஃகீரா அல்புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம்: 1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (வஹீ எனும்) வேத அறிவிப்பு எவ்வாறு துவங்கிற்று? என்பதும், புகழோங்கிய அல்லாஹ் கூறும், (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் இறைச் செய்தி (வஹீ) அருளியதைப் போன்றே உமக்கும் நாம்  இறைச் செய்தி (வஹீ) அருளினோம் எனும் (அல்குர்ஆன்: 4:163) வசனமும்.

1 . செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை மணக்கும் நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்ததை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அல்கமா பின் வக்காஸ் அல்லைஸிய்யீ (ரஹ்)

அத்தியாயம்: 1

(புகாரி: 1)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

1 – بَابُ بَدْءِ الوَحْيِ

قَالَ الشَّيْخُ الْإِمَامُ الْحَافِظُ أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْمُغِيرَةِ الْبُخَارِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى آمِينَ:

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ: {إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ} [النساء: 163]

حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ:

سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Bukhari-Tamil-1.
Bukhari-TamilMisc-1.
Bukhari-Shamila-1.
Bukhari-Alamiah-1.
Bukhari-JawamiulKalim-1.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்.

2 . ஹுமைதீ-அப்துல்லாஹ் பின் ஸுபைர்.

3 . ஸுஃப்யான் பின் உயைனா.

4 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்அன்ஸாரீ.

5 . முஹம்மத் பின் இப்ராஹீம் அத்தைமீ.

6 . அல்கமா பின் வக்காஸ் அல்லைஸீ.

7 . உமர் பின் கத்தாப் (ரலி)


1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> முஹம்மத் பின் இப்ராஹீம் —> அல்கமா பின் வக்காஸ் —> உமர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-168 , 300 , புகாரி-01, 5425293898507066896953 , முஸ்லிம்-3868 , இப்னு மாஜா-4227 , அபூதாவூத்-2201 , திர்மிதீ-1647 , நஸாயீ-75 , 3437 , 3794 ,


  • குதுபுத் திஸ்ஆ அல்லாத மற்ற நூல்கள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸ்னத் ஹுமைதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, அல்முன்தகா-, இப்னு குஸைமா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,


2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8540 .


தனிப்பகுதி:

அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-1. (ஜாமிஉல் உலூம், வல்ஹிகம்-இப்னு ரஜப்)


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.