தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1918

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

வீட்டுக்கு மணப்பெண் வரும்போது (மணமகனான) ஒரு ஆண் கூற வேண்டிய பிரார்த்தனை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடித்தால் அல்லது ஒரு அடிமையையோ அல்லது  வாகனத்தையோ வாங்கினால் அதன் நெற்றி முடியை பிடித்தவாறு, “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரிஹா, வ கைரி மா ஜுபிலத் அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஜுபிலத் அலைஹி” என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(இப்னுமாஜா: 1918)

بَابُ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَتْ عَلَيْهِ أَهْلُهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَصَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الْقَطَّانُ، قَالَا: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

إِذَا أَفَادَ أَحَدُكُمُ امْرَأَةً، أَوْ خَادِمًا، أَوْ دَابَّةً، فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا، وَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا، وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1908.
Ibn-Majah-Shamila-1918.
Ibn-Majah-Alamiah-1908.
Ibn-Majah-JawamiulKalim-1908.




மேலும் பார்க்க: அபூதாவூத்-2160 .