ஷஹ்ர் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நான் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உளூச் செய்வதை பார்த்தேன். அவர்கள் தங்களின் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தார்கள். நான் அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதைப் பார்த்தேன். அவர்கள் தங்களின் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம், ‘(இது) ஸூரா அல்மாயிதா (அருளப்படுவதற்கு) முன்பா அல்லது பிறகா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் அல்மாயிதாவிற்குப் பிறகுதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை குதைபா அவர்கள், காலித் பின் ஸியாத் அத்திர்மிதீ —> முகாதில் பின் ஹய்யான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> ஜரீர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.
பகிய்யா அவர்கள், இப்ராஹிம் பின் அத்ஹம் —> முகாதில் பின் ஹய்யான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> ஜரீர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.
காலுறைகள் மீது மஸ்ஹு செய்வதை விரும்பாத சிலர், நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தது ஸூரா அல்மாயிதா அருளப்படுவதற்கு முன்பாகும் என்று விளக்கம் அளிக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஹதீஸ் விளக்கமளிப்பதாக உள்ளது. ஏனெனில் இதில் ஜரீர் (ரலி) அவர்கள், ஸூரா அல்மாயிதா அருளப்பட்டதற்குப் பிறகே நபி (ஸல்) அவர்கள் தங்களின் காலுறைகள் மீது மஸ்ஹு செய்ததைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்கள்.
(திர்மிதி: 94)وَيُرْوَى عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، قَالَ:
رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقُلْتُ لَهُ فِي ذَلِكَ، فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقُلْتُ لَهُ: أَقَبْلَ المَائِدَةِ، أَمْ بَعْدَ المَائِدَةِ؟ فَقَالَ: مَا أَسْلَمْتُ إِلَّا بَعْدَ المَائِدَةِ،
حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ زِيَادٍ التِّرْمِذِيُّ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ جَرِيرٍ، وَرَوَى بَقِيَّةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ جَرِيرٍ
«وَهَذَا حَدِيثٌ مُفَسَّرٌ لِأَنَّ بَعْضَ مَنْ أَنْكَرَ المَسْحَ عَلَى الخُفَّيْنِ تَأَوَّلَ أَنَّ مَسْحَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الخُفَّيْنِ كَانَ قَبْلَ نُزُولِ المَائِدَةِ، وَذَكَرَجَرِيرٌ فِي حَدِيثِهِ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الخُفَّيْنِ بَعْدَ نُزُولِ المَائِدَةِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-87.
Tirmidhi-Shamila-94.
Tirmidhi-Alamiah-87.
Tirmidhi-JawamiulKalim-87.
சமீப விமர்சனங்கள்