தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2921

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன்பு முஸப்பிஹாத் எனும் (அத்தியாயங்களான ஸப்பஹ, யுஸப்பிஹு, ஸப்பிஹ் எனத் துவங்கும் 57, 59, 61, 62, 64, 87 ஆகிய ஆறு) அத்தியாயங்களை ஓதுவார்கள். மேலும், இவற்றில் ஒரு வசனம் உள்ளது. அது ஆயிரம் வசனங்களை விடச் சிறந்தது என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(திர்மிதி: 2921)

حَدَّثَنَا عَليُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا بَقِيَّةُ بْنُ الوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بِلَالٍ، عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ، أَنَّهُ حَدَّثَهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ المُسَبِّحَاتِ قَبْلَ أَنْ يَرْقُدَ وَيَقُولُ: «إِنَّ فِيهِنَّ آيَةً خَيْرٌ مِنْ أَلْفِ آيَةٍ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2921.
Tirmidhi-Alamiah-2845.
Tirmidhi-JawamiulKalim-2864.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அலீ பின் ஹுஜ்ர்

3 . பகிய்யது பின் வலீத்

4 . பஹீர் பின் ஸஃத்

5 . காலித் பின் மஃதான்

6 . அப்துல்லாஹ் பின் அபூபிலால்

7 . இர்பாள் பின் ஸாரியா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பகிய்யது பின் வலீத் பற்றி தத்லீஸ் செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது. எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என அப்துல்லாஹ் ஸஃத் என்ற ஹதீஸ்கலை அறிஞர் கூறியுள்ளார்.

1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.

2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)

3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.

4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.

(இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் அல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை செய்தவர்கள் இவரின் சில மாணவர்கள் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். (அல்இக்மால்-3/6) எனவே இந்த நிபந்தனை தேவையில்லை)

5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. குறிப்பாக ஹிம்ஸ் பகுதியை சேரந்தவராக இருக்கக் கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும். (இந்த நிபந்தனை தேவையில்லை)

மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளில் ஒன்று குறைந்தாலும் சிலர் பலவீனம் என்றும், சிலர் இவரின் ஆசிரியர், இவரின் ஆசிரியரின் ஆசிரியர்களுக்கிடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

வேறு சிலர் முதலில் கூறப்பட்ட 3 நிபந்தனை இருந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.


  • பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
    இறப்பு ஹிஜ்ரி 160
    வயது: 74
    அவர்கள் ஏற்றுள்ளார்.

الكامل في ضعفاء الرجال (2/ 264)
حَدَّثَنَا الفضل بن عَبد اللَّه بْنِ سُلَيْمَانَ، حَدَّثَنا سُلَيْمَانُ بْنُ عَبد الحميد، حَدَّثَنا حيوة، قَالَ: سَمِعْتُ بَقِيَّة يَقُولُ لما قرأت عَلَى شُعْبَة كتاب بحير بْن سعد، قَال: قَال لي يا أبا يحمد لو لم أسمع هَذَا منك لطرت.

பகிய்யா அவர்கள், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடம் பஹீர் பின் ஸஃத் அவர்களின் ஹதீஸ் நூலை வாசித்துக் காட்டியபோது, இதை நான் கேட்டிராவிட்டால் உன்னை விரட்டியிருப்பேன் அபூயஹ்மதே! என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் கூறினார். (இதை பகிய்யாவே அறிவிக்கிறார்)

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/264)

பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் போன்றோரிடமிருந்து அறிவிப்பது சரியானது என்பதின்படி இது ஹஸன் தரமாகும்.


الثقات للعجلي ت البستوي (2/ 439):
2294 – ‌بن ‌أبي ‌بِلَال روى عَنهُ خَالِد بن معدان شَامي تَابِعِيّ ثِقَة

  • மேலும் இதில் வரும் ராவீ-23568-அப்துல்லாஹ் பின் அபூபிலால் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள் இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்த தாபிஈ என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவரை பலமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். (இவரிடமிருந்து காலித் பின் மஃதான் மட்டுமே அறிவித்துள்ளார்.)

(நூல்கள்: அஸ்ஸிகாத்-இஜ்லீ-2294, அஸ்ஸிகாத்-இப்னு ஹிப்பான்-5/49)

  • இந்த இருவரும் அறியப்படாதவர்களை பலமானவர்களின் பட்டியலில் கூறுவார்கள் என்பதால் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் போன்றோர் இவரை அறியப்படாதவர் என்று முடிவு செய்துள்ளனர்.
  • என்றாலும் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாமின் கருத்தை ஏற்பவர்கள் இவ்வாறு முடிவு செய்ய மாட்டார்கள்.

பஹீர் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஆவியா பின் ஸாலிஹ் அவர்கள், பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் சிலரை விட்டுவிட்டு (முஃளலாக) அறிவித்துள்ளார்.

ஷாம்வாசிகளான பஹீர் பின் ஸஃத் போன்றோரிடமிருந்து பகிய்யது பின் வலீத் அவர்கள் அறிவிப்பது சரியானது என்பதால் பகிய்யாவின் செய்தியே சரியானதாகும். மேலும் பஹீர் அவர்களின் மாணவர்களில் பகிய்யாவே முக்கியமானவர் ஆவார்.


1 . இந்தக் கருத்தில் இர்பாள் பின் ஸாரியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • பகிய்யது பின் வலீத் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> அப்துல்லாஹ் பின் அபூபிலால் —> இர்பாள் பின் ஸாரியா (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: அஹ்மத்-17160 , அபூதாவூத்-5057 , திர்மிதீ-29213406 , குப்ரா நஸாயீ-, அல்முஃஜமுல் கபீர்-


  • முஆவியா பின் ஸாலிஹ் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> நபி (ஸல்)

பார்க்க: குப்ரா நஸாயீ-10483 ,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.