அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம், துன்பத்தில் இருக்கும் தனது சகோதரனுக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க பச்சை நிற ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்…
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(shuabul-iman-8843: 8843)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، نا أَبُو عَلِيٍّ الْحَافِظُ، نا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، نا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ الْمَرْوَزِيُّ بِنَيْسَابُورَ، نا عَبْدُ اللهِ بْنُ هَارُونَ الْحَدِّيُّ بِمَكَّةَ، نا قُدَامَةُ بْنُ مُحَمَّدٍ الْخَشْرَمِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ عَزَّى أَخَاهُ الْمُسْلِمَ فِي مُصِيبَةٍ، كَسَاهُ اللهُ حُلَّةً خَضْرَاءَ يُحْبَرُ بِهَا ” قِيلَ: يَا رَسُولَ اللهِ، مَا يُحْبَرُ بِهَا؟ قَالَ: ” يُغْبَطُ بِهَا
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8843.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8681.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்
2 . ஹாகிம்
3 . ஹுஸைன் பின் அலீ
4 . இப்னு குஸைமா
5 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மன்ஸூர்
6 . அப்துல்லாஹ் பின் ஹாரூன்
7 . குதாமா பின் முஹம்மத்
8 . முஹம்மத் பின் குதாமா
9 . புகைர் பின் அப்துல்லாஹ்
10 . ஸுஹ்ரீ இமாம்
11 . அனஸ் (ரலி)
الثقات لابن حبان ط- اخرى (ص: 2)
عبد الله بن هارون بن موسى الفروي، أبو علقمة
يروي عن قدامة بن محمد الخشرمي، حَدَّثنا عنه عمرو بن عبد العزيز وغيره من شيوخنا، يخطئ ويخالف.
وقال الدارقطني في “غرائب مالك” : متروك الحديث .
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26159-அப்துல்லாஹ் பின் ஹாரூன் பின் மூஸா-அபூஅல்கமா என்பவர் பற்றி இவர் தவறிழைப்பவர்; மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் கூறியுள்ளார். - இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார். - ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். - இவர் விடப்பட்டவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் பலவீனமானவர் அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்கள்: அஸ்ஸிகாத்-8/367, தஹ்தீபுத் தஹ்தீப்-4/558, தக்ரீபுத் தஹ்தீப்-1/1180)
- 2 . மேலும் இதில் வரும் ராவீ-42172-முஹம்மத் பின் குதாமா என்பவரிடமிருந்து இவரின் மகன் குதாமா பின் முஹம்மத் பின் குதாமா அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இவரின் நிலை அறியப்படவில்லை.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அத்துஆ-தப்ரானீ-1226 , ஷுஅபுல் ஈமான்-8843 , தாரீகு பஃக்தாத்-, தாரீகு திமிஷ்க்-, …
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1601 .
சமீப விமர்சனங்கள்