ஒருவர் ஒவ்வொரு நாளும், அல்லாஹ்வே! என்னையும், நம்பிக்கைக் கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் மன்னிப்பாயாக! என்று பிரார்த்தனைச் செய்தால் அவர்களில் ஒவ்வொருவருக்கும் பகரமாக அவருக்கு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 877)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَكَرِيَّا، ثنا قَحْطَبَةُ بْنُ غَدَانَةَ، ثنا أَبُو أُمَيَّةَ بْنُ يَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ قَالَ كُلَّ يَوْمٍ: اللهُمَّ اغْفِرْ لِي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ أَلْحِقْ بِهِ مِنْ كُلِّ مُؤْمِنٍ حَسَنَةً
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-877.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19354.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . முஹம்மத் பின் ஸகரிய்யா
3 . கஹ்தபா பின் ஃகுதானா
4 . அபூஉமைய்யா பின் யஃலா
5 . ஸயீத் பின் யஸார்-…
6 . கைரா
7 . உம்மு ஸலமா (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8004-இஸ்மாயீல் பின் யஃலா-அபூஉமைய்யா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்.
(நூல்: லிஸானுல் மீஸான்-2/186)
2 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-877,
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3123.
சமீப விமர்சனங்கள்