தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-3123

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ்வின்) ஒரு அடியார், நம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பிரார்த்தனைச் செய்தால், ஏற்கனவே மரணித்துவிட்ட நம்பிக்கைக் கொண்டாருக்காகவும், மறுமைநாள் வரை வரும் நம்பிக்கைக் கொண்டாருக்காகவும் அவர் பிரார்த்தனை செய்ததைப் போன்று அல்லாஹ் எடுத்துக் கொண்டு, அவர் கேட்டது போன்றதை அவருக்கு வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(musannaf-abdur-razzaq-3123: 3123)

عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَبَانَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ عَبْدٍ يَدْعُو لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيْهِ عَنْ كُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ مَضَى أَوْ هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ بِمِثْلِ مَا دَعَا بِهِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-3123.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-3034.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக்

2 . மஃமர் பின் ராஷித்

3 . அபான் பின் அபூஅய்யாஷ்

4 . அனஸ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36-அபான் பின் அபூஅய்யாஷ் என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/103)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


  • முஃமின்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதால் இன்ன சிறப்பு உள்ளது என்ற கருத்தில் இங்கு குறிப்பிடப்படும் அறிவிப்பாளர்தொடர்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.
  • ஆனால் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்கு சில குர்ஆன் வசனங்கள் உள்ளன.

பார்க்க: (அல்குர்ஆன்: 14:41, 47:19, 59:10, 71:28) …


  • இவ்வாறே பிறருக்கு துஆ செய்வதின் சிறப்பு பற்றியும் சில ஹதீஸ்கள் உள்ளன.

பார்க்க: முஸ்லிம்-5279, …


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபான் பின் அபூஅய்யாஷ் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3123,


  • ஷுஐப் பின் கைஸான் —> அனஸ் (ரலி)

பார்க்க: தாரீகுல் கபீர்-2564, உகைலீ-2/182, அமாலீ-இப்னு பிஷ்ரான்-244,


التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (4/ 219):
حدَّثنا إسحاق، أَخبرنا عُمر بْنُ عُبَيد الطَّنافِسيّ، عَنْ شُعَيب بْنِ كَيسان، عَنْ أَنس بْنِ مَالِكٍ، قَالَ النَّبيُّ صلى الله عليه وسلم: ‌مَنِ ‌استَغفَرَ ‌لِلمُؤمِنِينَ رَدَّ اللَّهُ عَلَيهِ مِن آدَمَ فَما دُونَهُ.
لا يُعرف لَهُ سماع من أَنس، ولا يُتابَعُ عليه.


الضعفاء الكبير للعقيلي (2/ 182)

شُعَيْبُ بْنُ كَيْسَانَ عَنْ أَنَسٍ، كُوفِيٌّ. حَدَّثَنِي آدَمُ بْنُ مُوسَى قَالَ: سَمِعْتُ الْبُخَارِيَّ قَالَ: شُعَيْبُ بْنُ كَيْسَانَ، عَنْ أَنَسٍ، لَا يُعْرَفُ لَهُ سَمَاعٌ عَنْ أَنَسٍ، وَلَا يُتَابَعُ عَلَيْهِ

وَمِنْ حَدِيثِهِ مَا حَدَّثَنَاهُ جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ رَاهَوَيْهِ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ كَيْسَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَغْفَرَ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ رَدَّ اللَّهُ عَلَيْهِ مِنْ آدَمَ فَمَنْ دُونَهُ»


أمالي ابن بشران – الجزء الأول (ص: 116)
244 – وَأَخْبَرَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ، ثنا ابْنُ شِيرَوَيْهِ، ثنا إِسْحَاقُ، أَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ شُعَيْبِ بْنِ كَيْسَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اسْتَغْفَرَ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ رَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ مِنْ آدَمَ فَمَا دُونَهُ»


2 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-877.


3 . உபதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-2155.

مسند الشاميين للطبراني (3/ 234)
2155 – حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي الطَّاهِرِ بْنِ السَّرْحِ، ثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ أَبُو صَالِحٍ الْحَرَّانِيُّ، ثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ بَكْرِ بْنِ خُنَيْسٍ، عَنْ عُتْبَةَ بْنِ حُمَيْدٍ، عَنْ عِيسَى بْنِ سِنَانٍ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اسْتَغْفَرَ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ مُؤْمِنٍ وَمُؤْمِنَةٍ حَسَنَةً»

நம்பிக்கைக் கொண்ட ஆண்கள், பெண்களுக்காக ஒருவர் பாவமன்னிப்புத் தேடினால், அவர்களில் ஒவ்வொருவருக்கும் பகரமாக அவருக்கு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9406-பக்ர் பின் குனைஸ் பற்றி அதிகமான அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் விசயத்தில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் வரம்பு மீறி (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என) விமர்சித்துள்ளார் என்றும்; இவர் நம்பகமானவர்; என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/242, தக்ரீபுத் தஹ்தீப்-1/175)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


4 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: உஸூலுஸ் ஸுன்னா-147.


أصول السنة لابن أبي زمنين (ص: 224)
147 – وَحَدَّثَنِي إِسْحَاقُ عَنْ أَسْلَمَ، عَنْ يُونُسَ، عَنْ اِبْنِ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ إِسْحَاقَ بْنِ أُسَيْدٍ، عَنْ عَطَاءٍ اَلْخُرَاسَانِيِّ، عَنْ اَلْحَسَنِ أَنَّ رَسُولَ اَللَّهِ صَلَّى اَللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ دَعَا لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَات، رَدَّ اَللَّهُ عَلَيْهِ مِثْلَ مَا دَعَا بِهِ مِمَّنْ مَضَى وَمِمَّنْ بَقِيَ


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.