தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2188

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

கலகம் செய்வோரின் பண்புகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது. அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவரான (நபியின்) வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அம்பு, வேட்டையாடிய விலங்கைத் துளைத்து வெளியேறுவதைப் போல மார்க்கத்திலிருந்து (வேகமாக) வெளியேறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), அபூஸயீத் (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

குர்ஆனை ஓதி, அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாமல், (அம்பு இலக்கிலிருந்து வெளியேறுவது போல்) மார்க்கத்திலிருந்து வெளியேறும் இந்த மக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு ஹதீஸ்களும் உள்ளன.

நிச்சயமாக இந்தச் செய்தி காரிஜிய்யா, ஹரூரிய்யா மற்றும் இவர்களைப் போன்ற பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றியே தெரிவிக்கிறது.

(திர்மிதி: 2188)

بَابٌ فِي صِفَةِ المَارِقَةِ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلَامِ، يَقْرَءُونَ القُرْآنَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»

وَفِي البَابِ عَنْ عَلِيٍّ، وَأَبِي سَعِيدٍ، وَأَبِي ذَرٍّ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ فِي غَيْرِ هَذَا الحَدِيثِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ وَصَفَ هَؤُلَاءِ القَوْمَ الَّذِينَ يَقْرَءُونَ القُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، إِنَّمَا هُمُ الْخَوَارِجُ وَالْحَرُورِيَّةُ وَغَيْرُهُمْ مِنَ الْخَوَارِجِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2188.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2114.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் முழுமையாகவும் அறிவித்துள்ளனர். மேற்கண்ட செய்தி சுருக்கமானதாகும்.

முழுமையான செய்திகள்:

பார்க்க: தாரிமீ-210.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அபூகுரைப்-முஹம்மத் பின் அலாஃ

3 . அபூபக்ர் பின் அய்யாஷ்

4 . ஆஸிம் பின் பஹ்தலா

5 . ஸிர்ரு பின் ஹுபைஷ்

6 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


5 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூபக்ர் பின் அய்யாஷ் —> ஆஸிம் பின் பஹ்தலா —> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-168, திர்மிதீ-2188, முஸ்னத் அபீ யஃலா-, …


  • அதாஉ பின் ஸாயிப் —> அப்துல்லாஹ் பின் ஹபீப் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-825,


  • அப்துர்ரஹ்மான் பின் மைனாஃ —> மைனாஃ பின் அபூமைனாஃ —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6461,


மேலும் பார்க்க: புகாரி-3611.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.