தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-168

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக் காலத்தில் சில இளைஞர்கள் தோன்றுவார்கள். அவர்கள் வயதில் சிறியவர்களாக இருப்பார்கள்; அறிவில் மழுங்கியவர்களாக இருப்பார்கள். மக்களில் சிறந்தவரான நபியின் சொல்லையே கூறுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. இஸ்லாத்திலிருந்து வில்லிலிருந்து அம்பு வெளியேறுவதுபோல் விரைவாக விலகிவிடுவார்கள்.

எவரேனும் அவர்களைச் சந்தித்தால், அவர்களைக் கொன்றுவிட வேண்டும். ஏனெனில், அவர்களைக் கொல்வது அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்கும் செயலாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

(இப்னுமாஜா: 168)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، قَالَا: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الْأَسْنَانِ، سُفَهَاءُ الْأَحْلَامِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ النَّاسِ، يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ،

فَمَنْ لَقِيَهُمْ فَلْيَقْتُلْهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ عِنْدَ اللَّهِ لِمَنْ قَتَلَهُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-168.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: திர்மிதீ-2188.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.