முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் உள்ளன. அவை, அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை ஏற்பட்டதில்லை.
1 . ரமளான் மாதத்தின் முதல் இரவில் சந்திர கிரகணம் ஏற்படுவதாகும்.
2 . அதன் பாதியில் (அதாவது 14 அல்லது 15 ஆம் நாளில்) சூரிய கிரகணம் ஏற்படுவதாகும்.
இவ்விரண்டும் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை நிகழ்ந்ததில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ்
(daraqutni-1795: 1795)حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْإِصْطَخْرِيُّ , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ , ثنا عُبَيْدُ بْنُ يَعِيشَ , ثنا يُونُسُ بْنُ بُكَيْرٍ , عَنْ عَمْرِو بْنِ شِمْرٍ , عَنْ جَابِرٍ , عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ , قَالَ:
«إِنَّ لَمَهْدِيِّنَا آيَتَيْنِ لَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ , يَنْخَسِفُ الْقَمَرُ لَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ , وَتَنْكَسِفُ الشَّمْسُ فِي النِّصْفِ مِنْهُ , وَلَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1795.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1573.
- இது மக்தூஃவான அறிவிப்பாளர்தொடர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்
2 . ஹஸன் பின் அஹ்மத்-அபூஸயீத் அல்இஸ்தக்ரீ
3 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் நவ்ஃபல்
4 . உபைத் பின் யஈஷ்
5 . யூனுஸ் பின் புகைர்
6 . அம்ர் பின் ஷிம்ர்
7 . ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ்
8 . முஹம்மத் பின் அலீ (ஹுஸைன்-ரலி-அவர்களின் பேரன்)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32335-அம்ர் பின் ஷிம்ர், ராவீ-9987-ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ் ஆகியோரை ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், இவர்கள் பொய்யர்கள் என்றும், இவர்களின் செய்திகளை எழுதக்கூடாது என்றும்; வேறு சிலர், இவர்கள் முன்கருல் ஹதீஸ் என்றும்; வேறு சிலர், இவர்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்றும்; விடப்பட்டவர்கள் என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/239, 2/497, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/226, 2/324, லிஸானுல் மீஸான்-5809, தஹ்தீபுத் தஹ்தீப்-1/283, தக்ரீபுத் தஹ்தீப்-1/192)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்த ஹதீஸின் பலகீனமான ராவியில்
உண்மை பெயர் என்ன ❓
சில ஹதீஸில் இப்னு சமிர் என்றும்,
சிலதில் இப்னு சமர் என்றும் பதியப்பட்டுள்ளது.
அவரின் சில ஹதீஸ்கள்👇
*7. “நபி (ﷺ) கூறினார்: ‘அல்லாஹ் அனுமதித்த உணவை சாப்பிட்டால் உளூ தேவையில்லை.'”*
*3. “பனூ ஹாஷிம் மற்றும் அன்சாரிகளை வெறுப்பது குஃப்ர்; அரபிகளை வெறுப்பது நிஃபாக்.”*
*4. “யார் தன் செல்வத்தைக் காப்பாற்றிக் கொண்டு கொல்லப்படுகிறாரோ, அவர் ஷஹீது.”*
*6. “நபி (ﷺ) அரஃபா நாளின் ஃபஜ்ரிலிருந்து துல்ஹிஜ்ஜாவின் 13ம் நாள் அஸ்ர் வரை தக்பீர் சொல்வார்கள்.”*
*8. “நபி (ﷺ) ஃபஜ்ரில் குனூத் செய்வார்; அரஃபா நாளின் ஃபஜ்ரிலிருந்து துல்ஹிஜ்ஜாவின் 13ம் நாள் அஸ்ர் வரை தக்பீர் சொல்வார்கள்.”*
*9. “நபி (ﷺ) அரஃபா நாள் ஃபஜ்ருக்குப் பின், உங்கள் இடத்தில் இருங்கள் என்று சொல்லி, அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வ லில்லாஹில் ஹம்த் என்று தக்பீர் சொல்வார்கள்.”*
*10. “நபி (ﷺ) என்னிடம் கூறினார்: ஒரு சிக்கலில் சிக்கினால், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலீயில் அஸீம் என்று சொல்; அல்லாஹ் அதை நீக்குவான்.”*
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு அறிவிப்பாளரின் பெயர் அரபியில் பல அமைப்பில் இருந்தால் அதில் எது சரியென்பதை பார்த்தே நாம் தமிழில் பதிவு செய்கிறோம். சிலரின் பெயர்கள் இரண்டு மூன்று அமைப்பிலும் கூறப்படும்.
நீங்கள் குறிப்பிட்ட ராவியின் பெயர் அம்ர் பின் ஷிம்ர் என்பதே சரியாகும். இதுவே சில இடங்களில் இப்னு ஷிம்ர் என்று வரும்.