தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3388

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

காலை, மாலை ஓத வேண்டிய பிரார்த்தனைகள் குறித்து வந்துள்ளவை.

ஒரு அடியார் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும், “பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம்” என்று மூன்று முறை கூறினால் அவருக்கு எந்த ஒன்றும், தீங்கு செய்யாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதன் பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயருடன் இருக்கும்போது வானத்திலோ, பூமியிலோ எந்தப் பொருளும் தீங்கு செய்யாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிபவன்.)

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


இந்த ஹதீஸை அறிவித்த அபான் (ரஹ்) அவர்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஒருவர் அபான் (ரஹ்) அவர்களைப் பார்த்தபோது, அபான் (ரஹ்) அவர்கள், “என்னைப் பார்க்கிறீர்களா? நான் உங்களுக்கு அறிவித்த ஹதீஸ் உண்மையானதே. ஆனால், அல்லாஹ் தன் விதியை என்மீது நிறைவேற்றுவதற்காகவோ (என்னவோ) அன்று நான் அந்த துஆவைக் கூறவில்லை” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(திர்மிதி: 3388)

بَاب مَا جَاءَ فِي الدُّعَاءِ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ وَهُوَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ العَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ، فَيَضُرَّهُ شَيْءٌ “

وَكَانَ أَبَانُ، قَدْ أَصَابَهُ طَرَفُ فَالِجٍ، فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ لَهُ أَبَانُ: «مَا تَنْظُرُ؟ أَمَا إِنَّ الحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ، وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَيَّ قَدَرَهُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3388.
Tirmidhi-Alamiah-3310.
Tirmidhi-JawamiulKalim-3335.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . அபூதாவூத்-தயாலிஸீ

4 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ்-இப்னு அபுஸ்ஸினாத்

5 . அப்துல்லாஹ் பின் தக்வான்-அபுஸ்ஸினாத்

6 . அபான் பின் உஸ்மான்

7 . உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21935-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ்-இப்னு அபுஸ்ஸினாத் அவர்கள் பற்றி, சிலர் பலமானவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும்; சிலர் இவர் ஆதாரத்திற்கேற்றவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.
  • இதன் காரணம் இவர் மதீனாவில் இருந்து பஃக்தாதுக்கு சென்ற பின்னர் இவரின் நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்பதால் ஆகும். எனவே தான் இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    ஸாஜீ ஆகியோர் இவர் மதீனாவில் அறிவித்த செய்திகள் சரியானவை என்றும், பஃக்தாதில் அறிவித்த செய்திகள் பலவீனமானவை என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், முன்சென்ற அறிஞர்களின் விமர்சனத்தின் படி இவரை நம்பகமானவர் என்றும், பஃக்தாதுக்கு சென்ற பின் இவரின் நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/578)


شرح علل الترمذي (2/ 769):
ومنهم عبد الرحمن بن أبي الزناد.
وقد وثقه قوم وضعفه آخرون منهم يحيى بن معين. وقال يعقوب بن شيبة: سمعت علي بن المديني يضعف ما حدث به ابن أبي الزناد (بالعراق) ويصحح ما حدث به بالمدينة. قال: وسمعت ابن المديني يقول: ما روى سليمان الهاشمي عنه فهي حسان، نظرت فيها فإذا هي مقاربة وجعل علي يستحسنها.

இப்னு ரஜப் அவர்கள், குறிப்பிட்ட ஒரு ஊரில் அறிவித்தால் பலவீனமானவர் என்றும் வேறு ஊரில் அறிவித்தால் பலமானவர் என்றும் முடிவு செய்யப்படும் அறிவிப்பாளர்களில் இவரைக் குறிப்பிட்டுவிட்டு கூறுகிறார்:

இவரை சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (என்றாலும் அப்பாஸ் அத்தூரீ அவர்களின் அறிவிப்பில் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவரை லைஸ பிஹீ பஃஸ்-பலமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்)

(அலீ பின் மதீனீ-இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் மாணவரான) யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள், இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவர் ஈராக்கில் இருக்கும்போது அறிவித்த செய்திகளை பலவீனமானவை என்றும், மதீனாவில் இருக்கும்போது அறிவித்த செய்திகளை சரியானவை என்றும் கூறுவார்.

மேலும் (விதிவிலக்காக ஈராக்கின் பஃக்தாதைச் சேர்ந்த) ஸுலைமான் பின் தாவூத் அல்ஹாஷிமீ அவர்கள் இவரிடமிருந்து அறிவித்த செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை என்றும் அலீ பின் மதீனீ கூறுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஷரஹ் இலலுத் திர்மிதி-2/769)


மேற்கண்ட செய்தியை இவரிடமிருந்து அறிவித்தவர்கள் பெரும்பாலும் பஃக்தாத், பஸராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சிலர் மதீனாவாசிகளாக இருந்து பிறகு பஃக்தாத், பஸராவிற்கு குடியேறியவர்களாக உள்ளனர்.

இந்தச் செய்தியுடன் அபான் அவர்களைப் பற்றிய நிகழ்வு கூறப்பட்டிருப்பதால் இதை அவர் சரியாக மனனமிட்டுருக்கலாம் என்று தெரிகிறது.

هدي الساري (ص363 ط السلفية):
وقد قال أحمد بن حنبل: إذا ‌كان ‌في ‌الحديث ‌قصة دل على أن راويه حفظه

ஒரு செய்தியில் ஏதேனும் சம்பவம் பற்றி கூறினால் அதை அறிவிப்பாளர் சரியாக மனனம் செய்திருக்கலாம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்றவர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: ஹத்யுஸ் ஸாரீ-ஃபத்ஹுல் பாரீ-1/363)

ஆய்வுக்காக: الضعيف اذا روى قصة دل على انه قد حفظها .

இந்த சட்டம் எல்லா அறிவிப்பாளர்களுக்கும் பொருந்திப் போகாது. இதை வைத்தும், வேறு சில சான்றுகளை வைத்தும் இலல் துறை அறிஞர்கள் முடிவு காண்பார்கள்.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (3/ 7)
254- سُئِلَ الشَّيْخُ أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ عُمَرَ بْنِ أَحْمَدَ بْنِ مَهْدِيٍّ الْحَافِظُ الْعَدْلُ عَنْ حَدِيثِ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، عن النبي صلى الله عليه وسلم قال: مَنْ قَالَ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ يَفْجَأْهُ بَلَاءٌ.
فَقَالَ: هُوَ حَدِيثٌ يَرْوِيهِ أَبُو مَوْدُودٍ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أَبُو ضَمْرَةَ، عَنْ أَبِي مَوْدُودٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ.
وَتَابَعَهُ خَالِدُ بْنُ يَزِيدَ الْعُمَرِيُّ.

وَخَالَفَهُمَا زَيْدُ بْنُ الْحُبَابِ؛ فَرَوَاهُ عَنْ أَبِي مَوْدُودٍ، قَالَ: حَدَّثَنِي مَنْ سَمِعَ أَبَانَ، وَلَمْ يُسَمِّ أَحَدًا.
وَخَالَفَهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ؛ رَوَيَاهُ عَنْ أَبِي مَوْدُودٍ، قال: حدثني رجل، عمن سَمِعَ أَبَانَ بْنَ عُثْمَانَ، عَنْ عُثْمَانَ.
وَهَذَا الْقَوْلُ هُوَ الْمَضْبُوطُ عَنْ أَبِي مَوْدُودٍ.
وَمَنْ قَالَ فِيهِ: عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقَرَظِيِّ فَقَدْ وَهِمَ.
قَالَهُ أَبُو ضَمْرَةَ أَنَسُ بْنُ عَيَّاضٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ، وَآخَرُونَ، عَنِ الزُّبَيْرِ بْنِ بَكَّارٍ، عَنْ أَبِي ضَمْرَةَ.
وَرَوَى هَذَا الْحَدِيثَ أَبُو الزِّنَادِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، حَدَّثَ بِهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ. وَهَذَا مُتَّصِلٌ، وَهُوَ أَحْسَنُهَا إِسْنَادًا.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், சிலர் இதை அபூமவ்தூத் அவர்களிடமிருந்து, அபூமவ்தூத் —> முஹம்மத் பின் கஅப் —> அபான் பின் உஸ்மான் —> உஸ்மான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். இது தவறாகும்.

வேறு சிலர் அபூமவ்தூத் —> ஒரு மனிதர் —> அபான் பின் உஸ்மான் அவர்களிடம் செவியேற்றவர் —> அபான் பின் உஸ்மான் —> உஸ்மான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். இவற்றில் (மிகப்பலமானவர்கள் அறிவிக்கும்) இரண்டாவது வகை அறிவிப்பாளர்தொடரே முன்னுரிமைபெற்ற அறிவிப்பாளர்தொடராகும்.

இதை அபுஸ்ஸினாத் அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் அவர்கள், அப்துல்லாஹ் பின் தக்வான்-அபுஸ்ஸினாத் —> அபான் பின் உஸ்மான் —> உஸ்மான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதுவே முத்தஸிலான (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்படாத) சரியான அறிவிப்பாளர்தொடராகும் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-254)


1 . இந்தக் கருத்தில் உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் தக்வான் —> அபான் பின் உஸ்மான் —> உஸ்மான் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்- 446, 474, அல்அதபுல் முஃப்ரத்- 660, இப்னு மாஜா-3869, திர்மிதீ-3388, குப்ரா நஸாயீ- 10106, அல்குனா—55, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்- 3076, ஹாகிம்- 1895, …


அபூமவ்தூத் — அபான் பின் உஸ்மான் அவர்களிடம் செவியேற்றவர்

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 29275, அபூதாவூத்-5088,


அபூமவ்தூத் — ஒரு மனிதர் — அபான் பின் உஸ்மான் அவர்களிடம் செவியேற்றவர்

பார்க்க: இலலுல் ஹதீஸ்-2105, ஹில்யதுல் அவ்லியா-9/42,


அபூமவ்தூத் — முஹம்மத் பின் கஅப்

பார்க்க: அஹ்மத்- 528, அபூதாவூத்-5089, முஸ்னத் பஸ்ஸார்- 357, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-3073,   3074, 3075, இப்னு ஹிப்பான்- 852, 862 , அத்துஆ-தப்ரானீ-317, …


யஸீத்

பார்க்க: முஸ்னத் அப்து பின் ஹுமைத்-54, குப்ரா நஸாயீ- 10107,


2 . அபான் பின் உஸ்மான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-3073.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-9761,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்களுக்கு விமர்சனங்கள், மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.