அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் விரோதியே! இஸ்லாத்தின் விரோதியே! அல்லாஹ்வின் செல்வத்தில் நீ துரோகம் செய்துவிட்டாய்” என்று கூறினார்கள். அதற்கு நான், “நான் அல்லாஹ்வின் விரோதியும் அல்ல, இஸ்லாத்தின் விரோதியும் அல்ல. ஆனால், அவ்விருவருக்கும் விரோதமாக இருப்பவர்களுக்குத்தான் நான் விரோதி. நான் அல்லாஹ்வின் செல்வத்தில் துரோகம் செய்யவில்லை. இது எனது ஒட்டகங்களை விற்று வந்த பணமும், போரில் கிடைத்த பங்குகளும் சேர்ந்ததாகும்” என்று கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள் மீண்டும் அதையே கூறினார்கள். நானும் அதே பதிலைக் கூறினேன். இறுதியில், அவர்கள் எனக்கு பன்னிரெண்டாயிரம் (திர்ஹம்) அபராதம் விதித்தார்கள். ஃபஜ்ர் தொழுகைக்காக நான் நின்றபோது, “யா அல்லாஹ்! அமீருல் முஃமினீனுக்கு நீ மன்னிப்பாயாக” என்று பிரார்த்தித்தேன்.
அதன் பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் என்னை ஒரு வேலையை ஏற்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். அதற்கு அவர்கள், “யூஸுஃப் (அலை) அவர்களை விட நீங்கள் சிறந்தவராக இருக்கிறீர்களா?. அவர்களே ஒரு வேலையைக் கேட்டார்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நான், “யூஸுஃப் (அலை) அவர்கள் ஒரு நபி. ஒரு நபியின் மகன். நபியின் மகனின் மகனுடைய மகன்.
நான் உமைமாவின் மகன். நான் மூன்றையும், இரண்டையும் கண்டு அஞ்சுகிறேன்” என்று கூறினேன்.
“ஐந்து என்று ஏன் சொல்லவில்லை?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். “அவை யாவை?” என்று அவர்கள் கேட்டபோது, நான் கூறினேன்: “அறியாமல் பேசுவதற்கும், அறியாமல் ஃபத்வா கொடுப்பதற்கும், எனது முதுகில் அடி விழுவதற்கும், எனது மானம் இழிவுபடுத்தப்படுவதற்கும், எனது செல்வம் அடிப்பதன் மூலம் பறிக்கப்படுவதற்கும் நான் அஞ்சுகிறேன்…
(ஹாகிம்: 3327)أَخْبَرَنِي أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْمُزَكِّي بِمَرْوَ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ رَوْحٍ الْمَدَاينِيُّ، ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
قَالَ لِي عُمَرُ: يَا عَدُوَّ اللَّهِ وَعَدُوَّ الْإِسْلَامِ خُنْتَ مَالَ اللَّهِ، قَالَ: قُلْتُ: لَسْتُ عَدُوَّ اللَّهِ، وَلَا عَدُوَّ الْإِسْلَامِ، وَلَكِنِّي عَدُوُّ مَنْ عَادَاهُمَا، وَلَمْ أَخُنْ مَالَ اللَّهِ، وَلَكِنَّهَا أَثْمَانُ إِبِلِي، وَسِهَامٌ اجْتَمَعَتْ. قَالَ: فَأَعَادَهَا عَلَيَّ وَأَعَدْتُ عَلَيْهِ هَذَا الْكَلَامَ، قَالَ: فَغَرَّمَنِي اثْنَيْ عَشَرَ أَلْفًا، قَالَ: فَقُمْتُ فِي صَلَاةِ الْغَدَاةِ، فَقُلْتُ: اللَّهُمَّ اغْفِرْ لِأَمِيرِ الْمُؤْمِنِينَ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ أَرَادَنِي عَلَى الْعَمَلِ، فَأَبَيْتُ عَلَيْهِ، فَقَالَ: وَلِمَ وَقَدْ سَأَلَ يُوسُفُ الْعَمَلَ وَكَانَ خَيْرًا مِنْكَ؟ فَقُلْتُ: إِنَّ يُوسُفَ نَبِيٌّ، ابْنُ نَبِيٍّ، ابْنِ نَبِيٍّ، ابْنِ نَبِيٍّ، وَأَنَا ابْنُ أُمَيْمَةَ وَأَنَا أَخَافُ ثَلَاثًا وَاثْنَتَيْنِ قَالَ: أَوَلَا تَقُولُ خَمْسًا؟ قُلْتُ: لَا قَالَ: فَمَا هُنَّ؟ قُلْتُ: «أَخَافُ أَنْ أَقُولَ بِغَيْرِ عِلْمٍ، وَأَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ، وَأَنْ يُضْرَبَ ظَهْرِي، وَأَنْ يُشْتَمَ عِرْضِي، وَأَنْ يُؤْخَذَ مَالِي بِالضَّرْبِ»
هَذَا حَدِيثٌ بِإِسْنَادٍ صَحِيحٍ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخْرِجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-3327.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்