بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ.
இறப்பு: ஹி-
தரம்:
கால கட்டம்: .
குறிப்பு: இந்த அறிவிப்பாளர் எண் ஜவாமிஉல் கலிம் எனும் சாப்ட்வேரில் உள்ளதல்ல.
تهذيب الكمال في أسماء الرجال (15/ 73):
3326 – بخ: عَبد اللَّهِ بن سويد الأَنْصارِيّ، أخو بني حارثة بن الْحَارِثِ. لَهُ صحبة.
حديثه عند الزُّهْرِيّ (بخ) ، عن ثعلبة بن أَبي مالك القرظي إنه ركب إِلَى عَبد اللَّهِ بن سويد، أخي بني حارثة بن الْحَارِثِ يسأله عن العورات الثلاث … الحديث. موقوف روى له البخاري في “الأدب” هَذَا الحديث الواحد. .
அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ என்பவரையும், அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ, அல்அன்ஸாரீ என்பவரையும் மிஸ்ஸீ இமாம் மேற்கண்டவாறு தனது தஹ்தீபுல் கமால் எனும் நூலில் ஒருவராக கணக்கிட்டு அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ அவர்களை நபித்தோழரின் பட்டியலில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-3326)
إكمال تهذيب الكمال – ط العلمية (4/ 422):
3150 – (بخ) عبد اللَّه بن سويد الأنصاري، أخو بني حارثة بن الحارث، له صحبة
كذا ذكره المزي، وأبى ذلك أبو أحمد العسكري فقال: قال بعضهم: لا يصح له صحبة. قال: وروى عن أم حميد عمته، وهي امرأة أبي حميد الساعدي. انتهى كلامه. ويشبه أن يكون وَهْمًا؛ لأن أبا حاتم جعلهما ترجمتيْن، وكذلك البخاري، مع تصريحهما بصحبة الأول، وكذا فعله غيرهما، واللَّه تعالى أعلم.
அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ என்பவரை நபித்தோழராக குறிப்பிட்டுள்ளதை அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அல்அஸ்கரீ அவர்கள் விமர்சித்து சிலர் இவரை நபித்தோழர் என்று குறிப்பிடவில்லை என்று கூறிவிட்டு இவர் தனது அத்தை உம்மு ஹுமைத் அவர்களிடமிருந்து (பெண்கள் வீட்டில் தொழுவது சிறந்தது என்ற ஹதீஸை) அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
“இக்மாலு தஹ்தீபில் கமால்” எனும் நூலின் ஆசிரியர் அலாஉத்தீன்-முஃகல்தாயி அவர்கள் இதை குறிப்பிட்டுவிட்டு உம்மு ஹுமைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ அவர்களையும், அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ, அல்அன்ஸாரீ அவர்களையும் அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஒருவராக கருதிவிட்டார். இது தவறாகும். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்ற பலர் இந்த பெயர் உள்ளவர்களை இருவராக கூறியுள்ளனர்; அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ அவர்களை நபித்தோழர் என்று கூறியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: இக்மாலு தஹ்தீபில் கமால்-4/422)
எனவே இவர் தாபிஈ ஆவார். இவரிடமிருந்து தாவூத் பின் கைஸ் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் சிலர்…இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.
இது போன்ற காலகட்டத்தில் உள்ளவர்கள் ஹஸன் தரத்தில் உள்ளவர்கள் ஆவார்கள் என்று சிலர் கருதுவதால் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும் இவரின் செய்தியை ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்.
…
التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (5/ 109):
323- عَبد اللهِ بْن سُوَيد، الأَنصاريّ.
عَنْ عَمَّتِه أُم حُمَيد، امرأة أَبي حُمَيد السّاعِدِيّ.
رَوَى عَنه دَاوُد بْن قَيس.
الجرح والتعديل – ابن أبي حاتم (5/ 66):
309 – عبد الله بن سويد الأنصاري روى عن عمته أم حميد امرأة أبي حميد الساعدي روى عنه داود بن قيس سمعت أبي يقول ذلك.
الثقات لابن حبان (7/ 42)
8921 – عَبْد اللَّهِ بْن سُوَيْد الْأنْصَارِيّ يروي عَنْ عمته أم حميد امْرَأَة أبي حميد السَّاعِدِيّ روى عَنْهُ دَاوُد بْن قيس
அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ அவர்களை நபித்தோழராகவும், அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ என்பவரை தாபிஈன்களின் பட்டியலிலும் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோர் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தாரீகுல் கபீர்-5/109, அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/66, அஸ்ஸிகாத்-7/42)
பார்க்க: அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்ஹாரிஸீ.
சமீப விமர்சனங்கள்