தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-14498

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். பின்னர் தலைமுடியைக் களைந்தார்கள். மக்களுக்காக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் (ஹஜ்ஜின் கிரியைகளை) முன்-பின் செய்ததைப் பற்றி எதுவும் கேட்கப்பட்டாலும், அதற்கவர்கள், ‘குற்றமில்லை, குற்றமில்லை’ என்றே கூறினார்கள்.

ஒருவர் வந்து, “குர்பானி கொடுப்பதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் வேறொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கல்லெறிவதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அரஃபா-பெருவெளி முழுவதும் தங்கும் இடமே. முஸ்தலிஃபா முழுவதும் தங்கும் இடமே. மினா முழுவதும் குர்பானி கொடுக்கும் இடமே. மக்காவின் எல்லாப் பாதைகளும் வழியும் குர்பானி கொடுக்கும் இடமே” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 14498)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أُسَامَةُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، أَنَّهُ قَالَ:

نَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَلَقَ، وَجَلَسَ لِلنَّاسِ، فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ: «لَا حَرَجَ، لَا حَرَجَ» ، حَتَّى جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لَا حَرَجَ» ، ثُمَّ جَاءَهُ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «لَا حَرَجَ» ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَالْمُزْدَلِفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ طَرِيقٌ وَمَنْحَرٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-14498.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.