தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-2029

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (அபூஹாதிம்) அவர்களிடம், ஸைத் பின் முபாரக் அஸ்ஸன்ஆனீ என்பவர் ஸல்லாம் பின் வஹ்ப் —> அவரின் தந்தை வஹ்ப் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட ஹதீஸ் குறித்துக் கேட்டேன்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.


அதற்கு, என் தந்தை (அபூஹாதிம்) அவர்கள், “இந்தச் செய்தி ‘முன்கர்’ – மறுக்கப்பட வேண்டிய செய்தி” என்று கூறினார்கள்.

(alilal-ibn-abi-hatim-2029: 2029)

وَسَأَلتُ أَبِي عَن حَدِيثٍ ؛ رَواهُ زَيدُ بنُ المُبارَكِ الصَّنعانِيُّ ، عَن سَلامِ بنِ وَهبٍ الجُندِيِّ ، عَن أَبِيهِ ، عَن طاوُسٍ ، عَنِ ابنِ عَبّاسٍ ،

أَنَّ عُثمانَ بنَ عَفّانَ سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَن {بِسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} ، فَقالَ : هُوَ اسمٌ مِن أَسماءِ اللهِ تَعالَى وَما بَينَهُ وَبَينَ اسمِ اللهِ الأَكبَرِ إِلاَّ كَما بَينَ سَوادِ العَينَينِ وَبَياضِهِما مِنَ القُربِ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-2029.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: ஹாகிம்-2027.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.