பாடம்:
(நட்சத்திரங்களை கணித்து) சோதிடம் கற்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நட்சத்திரங்களை கணித்து சோதிடத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொள்பவர், சூனியத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொண்டவர் ஆவார்.
மேலும் சோதிடத்தில் எந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகிறாரோ, அந்த அளவிற்கு சூனியத்திலும் அவர் ஈடுபட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 3726)بَابُ تَعَلُّمِ النُّجُومِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ، اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3716.
Ibn-Majah-Shamila-3726.
Ibn-Majah-Alamiah-3716.
Ibn-Majah-JawamiulKalim-3724.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா
2 . இப்னு அபூஷைபா இமாம்
3 . யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்
4 . உபைதுல்லாஹ் பின் அக்னஸ்
5 . வலீத் பின் அப்துல்லாஹ்-அல்அப்தரீ
6 . யூஸுஃப் பின் மாஹக்-அல்ஃபாரிஸீ
7 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
- இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம் பெறும் அனைவரும் பலமானவர்கள் என்பதாலும், (நாம் பார்த்தவரை) வேறு குறைகள் இல்லை என்பதாலும் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3905.
சமீப விமர்சனங்கள்