தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3905

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(நட்சத்திரங்களை கணித்து) சோதிடம் கற்பது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நட்சத்திரங்களை கணித்து சோதிடத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொள்பவர், சூனியத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொண்டவர் ஆவார்.

மேலும் சோதிடத்தில் எந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகிறாரோ, அந்த அளவிற்கு சூனியத்திலும் அவர் ஈடுபட்டவர் ஆவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 3905)

بَابٌ فِي النُّجُومِ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُسَدَّدٌ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ، اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3406.
Abu-Dawood-Shamila-3905.
Abu-Dawood-Alamiah-3406.
Abu-Dawood-JawamiulKalim-3408.




இந்தச் செய்தியின் 2 அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

2 . இப்னு அபூஷைபா இமாம், 3 . முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ

4 . யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்

5 . உபைதுல்லாஹ் பின் அக்னஸ்

6 . வலீத் பின் அப்துல்லாஹ்-அல்அப்தரீ

7 . யூஸுஃப் பின் மாஹக்-அல்ஃபாரிஸீ

8 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27253-உபைதுல்லாஹ் பின் அக்னஸ் பலமானவர் ஆவார்.

பார்க்க: ராவிபெயர்-உபைதுல்லாஹ் பின் அக்னஸ்.


  • இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம் பெறும் அனைவரும் பலமானவர்கள் என்பதாலும், (நாம் பார்த்தவரை) வேறு குறைகள் இல்லை என்பதாலும் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-3726, அபூதாவூத்-3905, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4488,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.