தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-35158-முஹப்பு பின் ஹத்லம்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முஹப்பு பின் ஹத்லம் – محب بن حذلم المصري

இறப்பு: ஹி-135.

தரம்:


இயற்பெயர்: முஹப்பு-முஹிப்பு

தந்தை பெயர்: ஹத்லம்

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூகைரா

ஊர் பெயர்: எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-135

கால கட்டம்: 5.


 

 

 


تفسير ابن أبي حاتم (1/ 350):
‌‌قوله: فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى
1842 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، ثنا أَبُو الطَّاهِرِ حَدَّثَنِي أَبُو زُرَارَةَ اللَّيْثُ بْنُ عَاصِمٍ الْقِتْبَانِيُّ، قَالَ: كَتَبَ إِلَيَّ أَبُو خَيْرَةَ ‌مُحِبُّ ‌بْنُ ‌حَذْلَمٍ، كَتَبَ يَذْكُرُ قَوْلَ اللَّهِ: وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَالتَّقْوَى: كَلِمَةٌ وَلَهَا تَفْسِيرٌ. وَتَفْسِيرُهَا: الْعَفَافُ عَمَّا حَرَّمَ اللَّهُ.



تعجيل المنفعة (2/ 242):
1011 – امحب بن حذلم الْمصْرِيّ أَبُو خيرة
قَالَ الْحُسَيْنِي فِي الكنى من الْإِكْمَال لَا يعرف وَتَبعهُ من بعده
وَزَاد بن شَيخنَا أَن الذَّهَبِيّ قَالَ لَا يعرف انْتهى وَبَقِيَّة كَلَام الذَّهَبِيّ وَيُقَال انه ‌محب ‌بن ‌حذلم الصَّالح وَأَخذه الْحُسَيْنِي فِي التَّذْكِرَة فَقَالَ قيل هُوَ ‌محب ‌بن ‌حذلم عداده فِي المصريين
قلت قد جزم باسمه وكنيته وَنسبه أَبُو سعيد بن يُونُس فِي تَارِيخ مصر فَقَالَ ‌محب ‌بن ‌حذلم مولى ثَابت بن زيد يكنى أَبَا خيرة روى عَن مُوسَى بن وردان روى عَنهُ سعيد بن أبي أَيُّوب وضمأم بن إِسْمَاعِيل وَاللَّيْث بن عَاصِم وَكَانَ فَاضلا يُقَال توفّي سنة خمس وَثَلَاثِينَ وَمِائَة وَلَيْسَ لَهُ غير حَدِيث وَاحِد ثمَّ سَاق من طَرِيق بن وهب عَن سعيد عَنهُ عَن مُوسَى لَا أعلمهُ إِلَّا عَن أبي هُرَيْرَة رَفعه فِي منع النِّسَاء من دُخُول الْحمام وَمنع الرِّجَال إِلَّا بمئزر وَهَذَا هُوَ الحَدِيث الَّذِي أخرجه لَهُ أَحْمد
وَأوردهُ بن يُونُس عَنهُ أثرا يدل على شهرته فِي المصريين فساق من طَرِيق أبي زُرَارَة اللَّيْث بن عَاصِم قَالَ كتب إِلَيّ أَبُو خيرة الْمُحب بن حذلم من برقة يسألني أَن أكلم النَّاس مِمَّن قبلنَا أَن يعينوا فِي فكاك أسرى أسرتهم بهم الرّوم الى برقة وَكَانَ فِي كِتَابه إِن الله تَعَالَى يَقُول وتزودوا فَإِن خير الزَّاد التَّقْوَى قَالَ وَالتَّقوى كَلَام جَامع تَفْسِيره العفاف عَمَّا حرم الله تَعَالَى
قَالَ ياسين بن عبد الْوَاحِد بن اللَّيْث فَكَانَ جدي يسألني كثيرا عَن كتاب أبي خيرة ويستحسن كَلَامه

முஹப்பு பின் ஹத்லம் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களின் குறிப்பு:

அல்ஹுஸைனீ அவர்கள் தனது ‘அல்இக்மால் ஃபீ திக்ரி மன் லஹு ரிவாயதுன் ஃபீ முஸ்னத் அஹ்மத்’ எனும் நூலில் (அல்குனா-புனைப் பெயர்களால் கூறப்பட்டவர்கள் பற்றிய பாடத்தில்) “இவரைப் பற்றி அறியப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் இவருக்கு பின் வந்தவர்களும் இவரை அறியப்படாதவர் என்று கூறினர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறியுள்ளார்.

(இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், அல்ஹுஸைனீ அவர்கள் கூறியதாக மேற்கண்ட தகவலை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவரை அறியப்படாதவர் என்று அல்ஹுஸைனீ அவர்கள் கூறிய தகவல் அந்த நூலில் இல்லை. மாறாக கீழ்க்கண்டவாறு அவர் யாரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவரிடமிருந்து யார் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளார்)

الإكمال في ذكر من له رواية في مسند الإمام أحمد من الرجال (ص505):
1064 – أَبُو خيرة عَن مُوسَى بن وردان عَن أبي هُرَيْرَة وَعنهُ سعيد بن أبي أَيُّوب قيل ‌هُوَ ‌محب ‌بن ‌حذلم ‌عداده ‌فِي ‌المصريين

(நூல்கள்: தஃஜீலுல் மன்ஃபஆ-2/242, அல்இக்மால் ஃபீ திக்ரி மன் லஹு ரிவாயதுன் ஃபீ முஸ்னத் அஹ்_மத்-1064)


மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்:

எமது ஆசிரியரின் மகன் கூறுகையில்: “இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இவரைப் பற்றி அறியப்படவில்லை என்றே கூறியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். இமாம் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் கருத்தில் எஞ்சிய பகுதி பின்வருமாறு: “இவர் முஹப்பு பின் ஹத்லம் அஸ்ஸாலிஹ் என்றும் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே அல்ஹுஸைனீ அவர்கள் ‘அத்தத்கிரா’ எனும் நூலில், “இவர் முஹப்பு பின் ஹத்லம் என்றும், எகிப்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது” எனப் பதிவு செய்துள்ளார்.

ميزان الاعتدال (4/ 521):
(10162) – ‌أبو ‌خيرة. ‌عن ‌موسى ‌بن ‌وردان. ‌لا ‌يعرف.

لسان الميزان (9/ 63):
‌‌8839 – ص – أبو خَيْرَة، عن موسى بن وردان، لا يعرف، وقيل: إنه محبّ بن ‌حذلم الصالح.

மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
கூறுகிறார்:

நான் கூறுகிறேன்: அபூஸயீத் பின் யூனுஸ் அவர்கள் தனது ‘தாரீக் மிஸ்ர்’ எனும் நூலில் இவருடைய பெயர், புனைபெயர், வம்சாவளியை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் பின்வருமாறு கூறுகிறார்:

“முஹப்பு பின் ஹத்லம் என்பவர் ஸாபித் பின் ஸைத்.. அவர்களின் அடிமை ஆவார். இவருடைய புனைபெயர் அபூகைரா. இவர் மூஸா பின் வர்தான் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஸயீத் பின் அபூஅய்யூப், லம்அம் பின் இஸ்மாயீல், லைஸ் பின் ஆஸிம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இவர் சிறந்த மனிதராக திகழ்ந்தார். இவர் ஹிஜ்ரி 135-ல் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஒரே ஒரு செய்தியை அறிவித்துள்ளார்.

அந்தச் செய்தி:

இப்னு வஹ்ப் —> ஸயீத் பின் அபூஅய்யூப் —> முஹப்பு பின் ஹத்லம் —> மூஸா பின் வர்தான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில்,

பெண்கள் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குச் செல்வதையும், ஆண்கள் கீழாடை இன்றி அங்குச் செல்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்” என்பதாகும். இதை இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் பதிவு செய்துள்ளார்.

இப்னு யூனுஸ் அவர்கள் இவரைப் பற்றி இன்னொரு தகவலையும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இவர் எகிப்தியர்களிடையே நன்கு அறியப்பட்டவர் என்று தெரிகிறது.

அந்தச் செய்தி:

அபூஸுராரா-லைஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பர்கா எனும் ஊரிலிருந்து அபூகைரா-முஹப்பு பின் ஹத்லம் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் ரோம் தேசத்தவர்களால் பர்காவுக்கு சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்காக எங்களிடம் உள்ள மக்களிடம் உதவி கோருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.

மேலும் அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

“நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:197). ‘தக்வா’ என்பது ஒரு விரிவான சொல்லாகும்; அல்லாஹ் எவற்றைத் தடுத்தானோ அவற்றிலிருந்து தவிர்ந்து இருப்பதே அதன் விளக்கமாகும்.

இதனை அறிவிக்கும் யாஸீன் பின் அப்துல்வாஹித் பின் லைஸ் அவர்கள் கூறுகிறார்கள்:

என்னுடைய பாட்டனார் லைஸ் அவர்கள், அபூகைரா அவர்களின் கடிதத்தைப் பற்றி என்னிடம் அடிக்கடி விசாரிப்பார்கள்; மேலும் அவருடைய அந்த அழகான விளக்கத்தைப் பெரிதும் பாராட்டுவார்கள்.


توضيح المشتبه (2/ 176):
قَالَ: وَأَبُو خيرة محب بن حذلم، عَن مُوسَى بن وردان، من صلحاء مصر.
قلت: محب هَذَا ضَبطه أَبُو بكر الْخَطِيب بِخَطِّهِ بِكَسْر الْحَاء الْمُهْملَة، وَفِي نُسْخَة بِكِتَاب عبد الْغَنِيّ وَعَلَيْهَا خطه وَخط أبي عبد الله الصُّورِي: الْمُحب بن حذلم بالتعريف وكسرالحاء، حَكَاهُ ابْن نَاصِر. وَقد ضَبطه المُصَنّف هُنَا بِفَتْح الْحَاء، وَصحح فَوْقه، وَقَيده فِي حرف الْمِيم باسم مفعول، وَوهم فِيهِ هُنَاكَ وهما آخر يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى.


توضيح المشتبه (8/ 65):
قَالَ: و [مُحَبّ] اسْم مفعول: ‌محب ‌بن ‌حذلم الْمصْرِيّ الزَّاهِد، عَن سَلمَة بن وردان.
[قلت: كَذَا نقلته من خطّ المُصَنّف، وَهُوَ وهم، إِنَّمَا هُوَ عَن مُوسَى بن وردان] كَمَا ذكره الْأَئِمَّة عبد الْغَنِيّ بن سعيد، وَابْن مَاكُولَا، وَغَيرهمَا، وَذكره المُصَنّف على الصَّوَاب فِي حرف الْجِيم بِخِلَاف مَا ذكره هُنَا، وَكَأَنَّهُ أَخذه من ابْن نقطة، فَلَو عزاهُ إِلَيْهِ؛ سلم، وَهَذَا هُوَ الْوَهم الْمَوْعُود فِي حرف الْجِيم بإثباته. وَالله أعلم.

تكملة الإكمال – ابن نقطة (2/ 239):
[1505] [(وأبو خَيْرَة مُحَبّ بن ‌حَذْلَم، مِصْرِيّ، حدّث عن سَلَمة بن وَرْدَان، ذكره الأمير في باب خَيْرَة.

تكملة الإكمال – ابن نقطة (5/ 286):
[5517] مُحَب بن ‌حَذْلَم، مِصْريٌّ، حَدَّث عن سَلَمة ابن وَرْدَان.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.