தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3401

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனது படுக்கையிலிருந்து எழுந்து, பிறகு மீண்டும் அங்கு திரும்பினால், அவர் தனது ஆடையின் ஓரத்தைக் கொண்டு (படுக்கையை) மூன்று முறை உதறட்டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் அதில் (பூச்சிகள் போன்றவைகளில்) என்ன புகுந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அவர் படுக்கும்போது இவ்வாறு கூறட்டும்:

பிஸ்மிக ரப்பீ வளஃது ஜன்பீ, வ பிக அர்ஃபஉஹு, ஃபஇன் அம்ஸக்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா, வஇன் அர்ஸல்தஹா ஃபஹ்ஃபள்ஹா பிமா தஹ்ஃபளு பிஹீ இபாதகஸ் ஸாலிஹீன்.

(பொருள்: அல்லாஹ்வே! உனது பெயரால் எனது விலாவைப் படுக்கையில் வைத்தேன். உனது உதவியாலேயே அதை உயர்த்தவும் (எழுந்திருக்கவும்) செய்வேன். நீ எனது உயிரை (தூக்கத்தில்) கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள்புரிவாயாக! அதை நீ மீண்டும் அனுப்பி வைத்தால் (உயிர் வாழச் செய்தால்), உனது நல்லடியார்களை எதனைக் கொண்டு பாதுகாப்பாயோ அதைக் கொண்டு இதையும் பாதுகாப்பாயாக!)

பிறகு அவர் விழித்தெழும்போது இவ்வாறு கூறட்டும்:

அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ ஃபீ ஜஸதீ, வ ரத்த அலய்ய ரூஹீ, வ அதின லீ பிதிக்ரிஹி.

(பொருள்: எனது உடலில் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்து, எனது உயிரை என்னிடம் திருப்பித் தந்து, அவனைத் துதிப்பதற்கு எனக்கு அனுமதியளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


 

(திர்மிதி: 3401)

بَاب مِنْهُ

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

” إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ إِزَارِهِ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدُ، فَإِذَا اضْطَجَعَ فَلْيَقُلْ: بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ، فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ “

وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَعَائِشَةَ،: ” وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ، وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ وَقَالَ: فَلْيَنْفُضْهُ بِدَاخِلَةِ إِزَارِهِ “


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3401.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-7393.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.