தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2898

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘ஸபா’ என்றால் என்ன? அது ஒரு மனிதரின் பெயரா? ஒரு பெண்ணின் பெயரா? அல்லது ஒரு நிலப்பகுதியின் பெயரா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை, அவர் ஒரு மனிதர். அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்தன. அவர்களில் ஆறு பேர் யமனிலும், நான்கு பேர் ஷாம் (சிரியா) தேசத்திலும் குடியேறினர்.

யமன் நாட்டைச் சேர்ந்தவர்கள்: மத்ஹிஜ், கிந்தா, அஸ்த், அஷ்அரிய்யூன், அன்மார், ஹிம்யர் ஆகியோராவர். இவர்கள் அனைவரும் அரபிகளே.

ஷாம் நாட்டைச் சேர்ந்தவர்கள்: லக்ம், ஜுதாம், ஆமிலா, கஸ்ஸான் ஆகியோராவர்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 2898)

حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ لَهِيعَةَ بْنِ عُقْبَةَ الْحَضْرَمِيُّ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ السَّبَائِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ:

إِنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سَبَأٍ، مَا هُوَ: أَرَجُلٌ أَمِ امْرَأَةٌ أَمْ أَرْضٌ؟ فَقَالَ: ” بَلْ هُوَ رَجُلٌ وَلَدَ عَشْرَةً، فَسَكَنَ الْيَمَنَ مِنْهُمْ سِتَّةٌ، وَبِالشَّامِ مِنْهُمْ أَرْبَعَةٌ، فَأَمَّا الْيَمَانِيُّونَ: فَمَذْحِجٌ وَكِنْدَةُ وَالْأَزْدُ وَالْأَشْعَرِيُّونَ وَأَنْمَارٌ وَحِمْيَرُ، عَرَبًا كُلَّهَا، وَأَمَّا الشَّامِيَّةُ: فَلَخْمٌ وَجُذَامُ وَعَامِلَةُ وَغَسَّانُ “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2898.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.