தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21652

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

21652. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆன் பிரதிகள் எழுதப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டுவந்த ஒரு இறைவசனத்தை (எழுத்தில்) காணவில்லை. இறுதியில் அந்த வசனத்தை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் (எழுத்தில்) பெற்றுக் கொண்டேன். அந்த இறைவசனம்:

அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை. (அல்குர்ஆன் 33:23)


மேலும் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: குஸைமா (ரலி) அவர்கள் “இரு சாட்சியங்களுக்கு உரியவர்” என்று அழைக்கப்பட்டு வந்தார்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடைய ஒரு சாட்சியத்தை இரண்டு ஆண்களின் சாட்சியத்திற்குச் சமமாக அனுமதித்திருந்தார்கள். (எனவே அவரிடம் எழுத்தில் இருந்த இந்த வசனத்திற்கு மற்றொரு சாட்சியை நான் தேடவில்லை)


ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குஸைமா (ரலி) அவர்கள் ஸிஃப்பீன் போரின் போது அலீ (ரலி) அவர்களின் அணியில் இணைந்து போரிட்டு கொல்லப்பட்டார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 21652)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، أَوْ غَيْرِهِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، قَالَ:

لَمَّا كُتِبَتِ الْمَصَاحِفُ فَقَدْتُ آيَةً كُنْتُ أَسْمَعُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُهَا عِنْدَ خُزَيْمَةَ الْأَنْصَارِيِّ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23] ، إِلَى، {تَبْدِيلًا} [الأحزاب: 23] قَالَ: فَكَانَ خُزَيْمَةُ يُدْعَى ذَا الشَّهَادَتَيْنِ «أَجَازَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَتَهُ بِشَهَادَةِ رَجُلَيْنِ»

قَالَ الزُّهْرِيُّ: «وَقُتِلَ يَوْمَ صِفِّينَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21652.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.