2540. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையைத் தக்பீரைக் கொண்டு ஆரம்பிப்பவர்களாகவும், ஸலாம் கூறுவதைக் கொண்டு அதை முடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
عَبْدُ الرَّزَّاقِ، عَنْ عُثْمَانَ بْنِ مَطَرٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ بُدَيْلٍ الْعُقَيْلِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ صَلَاتَهُ بِالتَّكْبِيرِ، وَيَخْتِمُهَا بِالتَّسْلِيمِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2540.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-2452.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28233-உஸ்மான் பின் மத்தர் என்பவரை அறிஞர்களில் சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
- இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளக்கூடாது என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், - இவர் மிகப் பலவீனமானவர் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களும், - இவர் முன்கருல் ஹதீஸ், வினோதமான செய்திகளை அறிவிப்பவர் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், - இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு தாஹிர் அவர்களும் கூறியுள்ளனர்.
- தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/79, தக்ரீபுத் தஹ்தீப்-1/669)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இதன் மூலம் அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டதாக குறிப்பிடும் தகவலை ஏற்கமுடியாது.
மேலும் பார்க்க: முஸ்லிம்-857.
சமீப விமர்சனங்கள்