ஒரு மனிதர் பனூஸஃத் பின் பக்ர் கிளையைச் சேர்ந்தவரும், நபித்தோழருமான ஸஃத் பின் அம்மார் (ரலி) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! எனக்கு (எனது நன்மைக்காக) அறிவுரை கூறுங்கள்!” என்றார்.
அதற்கு அவர்கள் கூறியவை:
1 . நீர் தொழுகைக்குத் தயாரானால், உளுவை முழுமையாகச் செய்வீராக! ஏனெனில், உளு இல்லாதவருக்குத் தொழுகை இல்லை; தொழுகை இல்லாதவருக்கு ஈமான் இல்லை.
பின்னர் தொடர்ந்தார்கள்:
2 . நீர் தொழுதால், (இதுவே உமது) இறுதித் தொழுகை என்பதைப் போல் தொழுவீராக!.
3 . அதிகமான தேவைகளைக் கோருவதைக் கைவிட்டுவிடுவீராக! ஏனெனில், அதுவே கண்முன்னே இருக்கும் வறுமையாகும்.
4 . மனிதர்களின் கைகளில் உள்ளவற்றிலிருந்து முற்றிலும் ஆசையைத் துறந்து விடுவீராக! ஏனெனில், இதுவே உண்மையான செல்வமாகும்.
5 . நாளை மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்தவொரு சொல் மற்றும் செயலின் பக்கமும் கவனமாக இருந்து, அவற்றை விட்டுத் தவிர்ந்து கொள்வீராக!.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5459)سَعْدُ بْنُ عُمَارَةَ السَّعْدِيُّ «وَكَانَ يَنْزِلُ الْمَدِينَةَ»
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْخَطَّابِ التُّسْتَرِيُّ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ سَعْدٍ، ثنا عَمِّي، ثنا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، وَيَحْيَى بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ الْأَنْصَارِيُّ، أَنَّهُمَا حَدَّثَاهُ: عَنْ سَعْدِ بْنِ عَمَّارٍ أَخِي بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ،
أَنَّ رَجُلًا قَالَ لَهُ: عِظْنِي فِي نَفْسِي يَرْحَمُكَ اللهُ، قَالَ: «إِذَا أَنْتَ قُمْتَ إِلَى الصَّلَاةِ، فَأَسْبِغِ الْوُضُوءَ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا إِيْمَانَ لِمَنْ لَا صَلَاةَ لَهُ» ، ثُمَّ قَالَ: «إِذَا أَنْتَ صَلَّيْتَ، فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَاتْرُكْ طَلَبَ كَثِيرٍ مِنَ الْحَاجَاتِ، فَإِنَّهُ فَقْرٌ حَاضِرٌ، وَاجْمَعِ الْيَأْسَ مِمَّا فِي أَيْدِي النَّاسِ، فَإِنَّهُ هُوَ الْغِنَى، وَانْظُرْ إِلَى مَا تَعْتَذِرُ مِنْهُ مِنَ الْقَوْلِ وَالْفِعْلِ، فَاجْتَنِبْهُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-5459.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்