தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-5459

 

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

5459. ஒரு மனிதர் பனூ ஸஃத் பின் பக்ர் கிளையைச் சேர்ந்தவரும், நபித்தோழருமான ஸஃத் பின் உமாரா (ரலி) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக! எனக்கு (எனது நன்மைக்காக) அறிவுரை கூறுங்கள்!” என்றார்.

அதற்கு அவர்கள் கூறியவை:

1 . நீர் தொழுகைக்குத் தயாரானால், உளுவை முழுமையாகச் செய்வீராக! ஏனெனில், உளு இல்லாதவருக்குத் தொழுகை இல்லை; தொழுகை இல்லாதவருக்கு ஈமான் இல்லை.

பின்னர் தொடர்ந்தார்கள்:

2 . நீர் தொழுதால், (இதுவே உமது) இறுதித் தொழுகை என்பதைப் போல் தொழுவீராக!.

3 . அதிகமான தேவைகளைக் கோருவதைக் கைவிட்டுவிடுவீராக! ஏனெனில், அதுவே கண்முன்னே இருக்கும் வறுமையாகும்.

4 . மனிதர்களின் கைகளில் உள்ளவற்றிலிருந்து முற்றிலும் ஆசையைத் துறந்து விடுவீராக! ஏனெனில், இதுவே உண்மையான செல்வமாகும்.

5 . நாளை மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்தவொரு சொல் மற்றும் செயலின் பக்கமும் கவனமாக இருந்து, அவற்றை விட்டுத் தவிர்ந்து கொள்வீராக!.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5459)

سَعْدُ بْنُ عُمَارَةَ السَّعْدِيُّ «وَكَانَ يَنْزِلُ الْمَدِينَةَ»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْخَطَّابِ التُّسْتَرِيُّ، ثنا عُبَيْدُ اللهِ بْنُ سَعْدٍ، ثنا عَمِّي، ثنا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، وَيَحْيَى بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ الْأَنْصَارِيُّ، أَنَّهُمَا حَدَّثَاهُ: عَنْ سَعْدِ بْنِ عَمَّارٍ أَخِي بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ،

أَنَّ رَجُلًا قَالَ لَهُ: عِظْنِي فِي نَفْسِي يَرْحَمُكَ اللهُ، قَالَ: «إِذَا أَنْتَ قُمْتَ إِلَى الصَّلَاةِ، فَأَسْبِغِ الْوُضُوءَ، فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا إِيْمَانَ لِمَنْ لَا صَلَاةَ لَهُ» ، ثُمَّ قَالَ: «إِذَا أَنْتَ صَلَّيْتَ، فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَاتْرُكْ طَلَبَ كَثِيرٍ مِنَ الْحَاجَاتِ، فَإِنَّهُ فَقْرٌ حَاضِرٌ، وَاجْمَعِ الْيَأْسَ مِمَّا فِي أَيْدِي النَّاسِ، فَإِنَّهُ هُوَ الْغِنَى، وَانْظُرْ إِلَى مَا تَعْتَذِرُ مِنْهُ مِنَ الْقَوْلِ وَالْفِعْلِ، فَاجْتَنِبْهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-5459.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.



 


ஆய்வின் சுருக்கம்:

இந்த வகை அறிவிப்பாளர்தொடர்களில் வரும் செய்திகளில் ஸஃத் பின் உமாரா (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள மேற்கண்ட செய்தியே முன்னுரிமை பெற்றதாகும். இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம்.

நபியின் சொல்லாக வந்துள்ள மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.


1 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் உமாரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5459,


2 . அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23498.


3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4427.


4 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7928.


5 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.