தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-32002

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

32002. உமர் (ரலி) அவர்களின் உணவுக் கிடங்கு காப்பாளராக இருந்த மாலிக் அத்தார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்குப் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்திற்கு மழை கேட்டுப் பிரார்த்தியுங்கள்; அவர்கள் அழிந்துவிட்டார்கள்” என்றார்.

பின்னர் அந்த மனிதருக்குக் கனவு வந்தது. அதில் அவரிடம், “நீ உமரிடம் சென்று அவருக்கு ஸலாமைத் தெரிவிப்பீராக! மேலும், ‘நீங்கள் நேர்மையான பாதையில் இருக்கிறீர்கள், உமக்குரிய புத்தி கூர்மையைச் செயல்படுத்துவீராக, உமக்குரிய புத்தி கூர்மையைச் செயல்படுத்துவீராக’ என்று அவரிடம் கூறுவீராக!” என்று சொல்லப்பட்டது.

உடனே அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து இதைக் கூறினார். அதைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள்; பிறகு, “என் இறைவா! என்னால் இயன்றவரை எதைக் குறித்தும் நான் குறை வைக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 32002)

حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ مَالِكِ الدَّارِ، قَالَ: وَكَانَ خَازِنَ عُمَرَ عَلَى الطَّعَامِ، قَالَ:

أَصَابَ النَّاسَ قَحْطٌ فِي زَمَنِ عُمَرَ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَسْقِ لِأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا، فَأَتَى الرَّجُلَ فِي الْمَنَامِ فَقِيلَ لَهُ: ” ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلَامَ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مُسْتَقِيمُونَ وَقُلْ لَهُ: عَلَيْكَ الْكَيْسُ، عَلَيْكَ الْكَيْسُ “، فَأَتَى عُمَرَ فَأَخْبَرَهُ فَبَكَى عُمَرُ ثُمَّ قَالَ: يَا رَبِّ لَا آلُو إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-32002.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.



 

 


இந்தச் செய்தியின் கருத்து சரியில்லை. மேலும் இது புகாரி-1010 இல் வந்துள்ள உமர் (ரலி) அவர்களின் வழமைக்கு மாற்றமாக உள்ளது என்பதுடன் குர்ஆனுக்கும், வேறு சில ஹதீஸ்களுக்கும் முரணாக உள்ளது.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.