பாடம் : 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
தவ்பா இப்னு கைசான் அல் அம்பரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பிறர் சொல்லக்கேட்டு நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்து ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சாப்பிடுங்கள்’ அல்லது ‘உண்ணுங்கள்’. ஏனெனில், அது, ‘அனுமதிக்கப்பட்டதாகும்’ அல்லது, ‘அதனால் குற்றமில்லை’ – அறிவிப்பாளர் தவ்பா(ரஹ்) அவர்கள் இந்த இடத்தில் ஐயப்பாட்டுடன் அறிவித்தார்கள் – ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு அல்ல’ என்றார்கள்.
Book : 95
(புகாரி: 7267)بَابُ خَبَرِ المَرْأَةِ الوَاحِدَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ العَنْبَرِيِّ، قَالَ: قَالَ لِي الشَّعْبِيُّ أَرَأَيْتَ حَدِيثَ الحَسَنِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ وَقَاعَدْتُ ابْنَ عُمَرَ قَرِيبًا، مِنْ سَنَتَيْنِ أَوْ سَنَةٍ وَنِصْفٍ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَ هَذَا قَالَ
كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ سَعْدٌ، فَذَهَبُوا يَأْكُلُونَ مِنْ لَحْمٍ، فَنَادَتْهُمُ امْرَأَةٌ مِنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:91]: إِنَّهُ لَحْمُ ضَبٍّ، فَأَمْسَكُوا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا أَوِ اطْعَمُوا، فَإِنَّهُ حَلاَلٌ – أَوْ قَالَ لاَ بَأْسَ بِهِ شَكَّ فِيهِ – وَلَكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي»
சமீப விமர்சனங்கள்