தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-604

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து (தொழுதுக்) கொள்வார்கள்.

ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்கள் வைத்திருக்கிற (ஊதுகுழல்) கொம்பைப் போன்று நாமும் (ஏற்படுத்தி) கொம்பூதலாமே! என்று கூறினர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை அனுப்பி வைக்கலாமே?” என்று கூறினார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் “பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)

அத்தியாயம்: 10

(புகாரி: 604)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ،

أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ كَانَ المُسْلِمُونَ حِينَ قَدِمُوا المَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاَةَ لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ بُوقًا مِثْلَ قَرْنِ اليَهُودِ، فَقَالَ عُمَرُ: أَوَلاَ تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلاَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ»


Bukhari-Tamil-604.
Bukhari-TamilMisc-604.
Bukhari-Shamila-604.
Bukhari-Alamiah-569.
Bukhari-JawamiulKalim-572.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . அப்துர்ரஸ்ஸாக்

4 . இப்னு ஜுரைஜ்

5 . நாஃபிஃ

6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு ஜுரைஜ் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-, புகாரி-604 , முஸ்லிம்-618 , திர்மிதீ-190 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-626 , இப்னு குஸைமா-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-, …


பாங்கு கூறுவதற்கு முன் உள்ள நடைமுறை என்ன என்பது இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.


பாங்கின் ஆரம்பம் குறித்து வந்துள்ள செய்திகள்:

1 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் மேற்கண்ட செய்தி.


2 . பெயர் குறிப்பிடப்படாத, சில அன்ஸாரி நபித்தோழர்கள் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-498 .


3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-603 .


4 . அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-499 .


….


  • பாங்கு, இகாமத் வாசகங்களின் எண்ணிக்கை பற்றிய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-623 .


  • ஃபஜ்ருத் தொழுகையில் கூறப்படும் “அஸ்ஸலாது கைரும் மினன் நவ்ம்” என்ற வாசகம் பற்றிய செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2158 .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.