பாடம்: 3
முதுமைப் பருவத்தில் பெற்றோர் இருவரையுமோ, அல்லது அவர்களில் ஒருவரையோ அடைந்தும் (அவர்களுக்கு நன்மை செய்து) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று கூறினார்கள். “யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம்: 45
(முஸ்லிம்: 4987)3 – بَابُ رَغِمَ أَنْفُ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا عِنْدَ الْكِبَرِ، فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ»، قِيلَ: مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ»
Muslim-Tamil-4987.
Muslim-TamilMisc-4627.
Muslim-Shamila-2551.
Muslim-Alamiah-4627.
Muslim-JawamiulKalim-4633.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . ஷைபான் பின் ஃபர்ரூக்
3 . அபூஅவானா-வள்ளாஹ் பின் அப்துல்லாஹ்
4 . ஸுஹைல் பின் அபூஸாலிஹ்
5 . அபூஸாலிஹ்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
அதிகமானோர், நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறியபோது ஆமீன் என்று கூறிய நிகழ்வுடன் இந்தச் செய்தியை மூன்று பகுதியாக அறிவித்துள்ளனர்.
மூன்று பகுதியாக வந்துள்ள செய்திகளும் சில ஹஸன் தர அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன. எனவே இவை ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19359-ஷைபான் பின் ஃபர்ரூக் சில செய்திகளில் தவறிழைத்துள்ளதால் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث ஆவார். இவரைப் போன்று அபூஅவானா அவர்களிடமிருந்து வேறுசிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியான செய்தியாகும்.
- மேலும் இதில் வரும் ராவீ-18816-ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்கள் பற்றி சிலர் பலவீனமானவர் என்று விமர்சித்திருந்தாலும் இவருக்கு கடைசிகாலத்தில் நோயின் காரணமாக நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டது என்பதால் (அல்லது சிலரின் கருத்துப்படி இவரின் சகோதரர் திடீரென இறந்துவிட்டதால் அதனால் பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டது என்பதால்) அப்போது அவர் அறிவிக்கும் செய்திகளில் தவறு ஏற்பட்டது என்பதால் ஆகும்.
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரைவிட முஹம்மத் பின் அம்ர் அவர்கள் நமக்கு பிரியமானவர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் கூறினார். ஆனால் முஹம்மத் பின் அம்ர் அவர்களை விட ஸுஹைலே நம் அறிஞர்களிடம் பலமானவர் என்று கூறியுள்ளார். - இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்கள், இவர் பலமானவர் என்றும், இவரிடமிருந்து அறிவித்தவர்களின் தவறினால் தான் இவரின் சில செய்திகளில் தவறு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரின் ஒரு செய்தியை துணை ஆதாரமாகக் கூறியுள்ளார். - முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்கள் இவரை தனி ஆதாரமாக ஏற்று இவர் அறிவிக்கும் பல செய்திகளை தனது ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/246, தஹ்தீபுல் கமால்-12/223, தஹ்தீபுத் தஹ்தீப்-2/128, தக்ரீபுத் தஹ்தீப்-1/421, லிஸானுல் மீஸான்-9/320)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8557 , அல்அதபுல் முஃப்ரத்-21 , முஸ்லிம்-4987 , 4988 , ஷுஅபுல் ஈமான்-7500 ,
- அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-7451 , திர்மிதீ-3545 , முஸ்னத் பஸ்ஸார்-8465 , இப்னு ஹிப்பான்-908 , ஹாகிம்-2016 ,
- கஸீர் பின் ஸைத் —> வலீத் பின் ரபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-646 , முஸ்னத் பஸ்ஸார்-8116 , இப்னு குஸைமா-1888 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8994 , குப்ரா பைஹகீ-8504 ,
- ஹஃப்ஸ் —> அம்ர் பின் அல்கமா —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-5922 , இப்னு ஹிப்பான்-907 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8131 ,
- யஹ்யா பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்மதாலிபுல் ஆலியா-,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ,
3 . கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ,
4 . ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ,
5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ,
…
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்