அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
(அபூதாவூத்: 4681)حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ
«مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4061.
Abu-Dawood-Shamila-4681.
Abu-Dawood-Alamiah-4061.
Abu-Dawood-JawamiulKalim-4063.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34002-காஸிம் பின் அப்துர்ரஹ்மான் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
போன்றோர் பலமானவர் எனக் கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்றோர் இவர் முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளனர். என்றாலும் இதன் காரணம் மற்ற பலவீனமான அறிவிப்பாளர்கள் தான் என்பதால் இவரிடம் குறையில்லை என ஷுஐப் அவர்கள் கூறியுள்ளார்.
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34730 , அபூதாவூத்-4681 , அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-9083 ,
2 . முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2521 .
சமீப விமர்சனங்கள்