தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4681

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4681. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.

அறிவிப்பவர் : (ரலி)

அபூஉமாமா (ரலி)

அபூஉமாமா-அல்பாஹிலீ (ரலி) – Abu Umama al-Bahili

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப்

தந்தை பெயர்: அஜ்லான் பின் வஹ்ப்

வம்சம்: அல்பாஹிலீ

புனைப்பெயர்: அபூஉமாமா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஉமாமா ரலி அவர்களின் இயற்பெயர் சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப் ஆகும். இவர் ஒரு நபித்தோழர். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம் ஆகிய இடங்களில் வசித்தார். இவர் ஹிஜ்ரி 86 ஆம் ஆண்டு ஹிம்ஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீ தாலிப் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), அம்ர் பின் அப்சா அஸ்ஸலமீ (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் ஹபீப் அல்மஹாரபீ, ஷத்தாத் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ, மம்தூர் அஸ்வத் அபூஸல்லாம், மக்ஹூல் அஷ்ஷாமீ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ, காஸிம் பின் அப்துர்ரப், ரஜா பின் ஹய்வா, ஸல்ம் பின் அபில் ஜஃத், காலித் பின் மஃதான், அபூ ஃகாலிப் அர்ராஸிபீ, சுலைம் பின் ஆமிர் அல்குலாஈ

வேறு பெயர்கள்: அபூ இமாமா


ஆதாரம்: muslimscholars.info (4048) · Should verify


حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

«مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4061.
Abu-Dawood-Shamila-4681.
Abu-Dawood-Alamiah-4061.
Abu-Dawood-JawamiulKalim-4063.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34002-காஸிம் பின் அப்துர்ரஹ்மான் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    போன்றோர் பலமானவர் எனக் கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    போன்றோர் இவர் முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளனர். என்றாலும் இதன் காரணம் மற்ற பலவீனமான அறிவிப்பாளர்கள் தான் என்பதால் இவரிடம் குறையில்லை என ஷுஐப் அவர்கள் கூறியுள்ளார்.

…


1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34730, அபூதாவூத்-4681, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-9083,


2 . முஆத் பின் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2521.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.