பாடம்: 12
இரண்டு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.
அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்:
(எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாகக்) குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்! என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்.
(ஒரே ஆண்டில்) இரு பெருநாட்களின் மாதங்களும் சேர்ந்தாற்போல் இருபத்தொன்பது நாட்களாகக் குறையாது” என்று முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹிஜ்ஜாவும் குறையாது.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
அத்தியாயம்: 30
(புகாரி: 1912)بَابٌ: شَهْرَا عِيدٍ لاَ يَنْقُصَانِ
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ إِسْحَاقُ: «وَإِنْ كَانَ نَاقِصًا فَهُوَ تَمَامٌ»
وَقَالَ مُحَمَّدٌ: «لاَ يَجْتَمِعَانِ كِلاَهُمَا نَاقِصٌ»
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: سَمِعْتُ إِسْحَاقَ بْنَ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَنِي مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
شَهْرَانِ لاَ يَنْقُصَانِ، شَهْرَا عِيدٍ: رَمَضَانُ، وَذُو الحَجَّةِ
Bukhari-Tamil-1912.
Bukhari-TamilMisc-1912.
Bukhari-Shamila-1912.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் விளக்கம் குறித்து சில அறிஞர்களின் கருத்துகள்:
1 . சிலர் இதன் வெளிப்படையான கருத்தை வைத்து இரு மாதங்களின் நாட்கள் 29 என்ற எண்ணிக்கையில் குறைவாக வராது. மாறாக 30 நாட்களாக வரும் என்று கூறியுள்ளனர்.
(இவ்வாறு பொருள் கொள்ள முடியாத அளவுக்கு வேறு ஆதாரங்கள் உள்ளன)
2 . இந்தச் செய்தியில் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிட்டது போன்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்ற அறிஞர்கள், “இந்த மாதங்களின் நாட்கள் 29 அல்லது 30 என்று வந்தாலும் நன்மையில் சமமானதே. 29 நாட்களில் செய்த அமல்களுக்கு 30 நாட்களில் செய்த அமல்களுக்கு கிடைக்கும் நன்மையை அல்லாஹ் வழங்குவான் என்பதே இதன் பொருள்” என்று கூறுகின்றனர்.
3 . முஹம்மத் பின் ஸீரீன், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் போன்ற வேறு சில அறிஞர்கள், ஒரே வருடத்தில் இரு மாதங்களின் நாட்களும் சேர்ந்தாற்போல் 29 நாட்களாக குறைந்து வராது. அதவாது ரமளான் மாதம் 29 நாட்களாக வந்தால் துல்ஹஜ் மாதம் 30 நாட்களாக வரும். ரமளான் மாதம் 30 நாட்களாக வந்தால் துல்ஹஜ் மாதம் 29 நாட்களாக வரும் என்று கூறுகின்றனர்.
(இந்தக் கருத்தை ஏற்கும் சிலர், “இது அதிகமாக இப்படித்தான் நிகழும் என்பதைக் கவனித்து கூறப்பட்டதாகும். சில நேரம் அரிதாக இரு மாதங்களும் 29 நாட்களாக அமையும்” என்றும் விளக்கம் கூறுகின்றனர். தற்போது வானியல் கணக்கீடும் இவ்வாறு உள்ளது).
4 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், “பிறை பார்க்கும்போது மேகமூட்டம் போன்ற காரணங்களால் நமக்கும் பிறையைப் பார்ப்பதற்கும் இடையே தடை ஏற்பட்டு, நம்முடைய பார்வையின்படி (நாட்களின் எண்ணிக்கையில்) அந்த இரு மாதங்களும் குறைந்தாலும், உண்மையான கணக்கில் அவை குறைவதில்லை என்ற கருத்தும் இதற்கு உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
5 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்ற வேறு சிலர், “ரமளான் மாதத்திற்கு உள்ள சிறப்பு போன்றே துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களுக்கு சிறப்பு உள்ளது. இரண்டும் சிறப்பில் குறைந்துவிடாது” என்று கூறுகின்றனர்.
6 . நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியை கூறியபோது அவர்கள் இருந்த வருடத்தை பற்றிய தகவல் தான் இது. அதாவது “அந்த வருடம் ரமளான், துல்ஹிஜ்ஜாவின் நாட்கள் 30 நாட்களாக இருக்கும். 29 ஆக குறைந்துவிடாது” என்றும் சிலர் கூறுகின்றனர்.
பார்க்க: திர்மிதீ-692, ஷரஹ் மஆனில் ஆஸார்-3195, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-497, இப்னு ஹிப்பான்-3448, ஃபத்ஹுல் பாரீ-4/124-126…
1 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா —> அபூபக்ரா (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-904, அஹ்மத்-20399, 20479, 20485, 20511, புகாரி-1912, முஸ்லிம்-1986, 1987, இப்னு மாஜா-1659, அபூதாவூத்-2323, திர்மிதீ-692, முஸ்னத் பஸ்ஸார்-3624, 3625, ஷரஹ் மஆனில் ஆஸார்-3194, 3195, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-496, 497, இப்னு ஹிப்பான்-325, 3431, 3448, குப்ரா பைஹகீ-8203, …
ناسخ الحديث ومنسوخه لابن شاهين (ص: 342)
418 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ، قَالَ: نا أَبُو تَقِيٍّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: نا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مِسْوَرِ بْنِ الصَّلْتِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: «مَا صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرَ مِمَّا صُمْنَا ثَلَاثِينَ»
وَالْمَعْنَى فِي هَذَا الْحَدِيثِ قَوْلُهُ: ” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الْحِجَّةِ ” الْمَعْنَى فِيهِ وَاللَّهُ أَعْلَمُ أَنَّهُمَا لَايَجْتَمِعَانِ عَلَى النُّقْصَانِ، إِنْ نَقَصَ رَمَضَانُ لَمْ يَنْقُصْ ذُو الْحِجَّةِ، وَإِنْ نَقَصَ ذُو الْحِجَّةِ لَمْ يَنْقُصْ رَمَضَانُ وَقَوْلُهُ مَا صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرَ مِمَّا صُمْنَا مَعَهُ ثَلَاثِينَ صَحِيحٌ، وَالْمَعْنَى فِي ذَلِكَ مَعْنَى الْأَوَّلِ وَلَيْسَ هَذَا بِنَاسِخٍ لِغَيْرِهِ
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்.
“பெருநாட்களைக் கொண்ட இரு மாதங்கள் குறையாது; அவை ரமலானும் துல்ஹிஜ்ஜாவும் ஆகும்” என்ற ஹதீஸின் உண்மையான கருத்து (யாவற்றையும் அல்லாஹ்வே மிக அறிந்தவன்):
இவ்விரு மாதங்களும் ஒரே ஆண்டில் ஒன்றாகக் குறைந்துவிடுவதில்லை என்பதாகும். ரமலான் மாதம் (நாட்களின் எண்ணிக்கையில்) குறைந்தால் துல்ஹிஜ்ஜா மாதம் குறையாது; துல்ஹிஜ்ஜா மாதம் குறைந்தால் ரமலான் மாதம் குறையாது.
“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்” என்று (இங்கு) கூறப்பட்டுள்ள செய்தி உண்மையானதே ஆகும். இதன் கருத்து முந்தைய விளக்கத்தின் அடிப்படையிலானது தான். மேலும், இச்செய்தி வேறு எந்த ஒரு சட்டத்தையும் மாற்றியமைக்கக் கூடியது அல்ல. (அதாவது நாஸிக் அல்ல.)
வானியல் கணக்கீடு:
இஸ்லாமிய மாதங்களின் வரிசையைக் கவனித்தால், ரமலானுக்கும் துல்ஹஜ்ஜுக்கும் இடையில் ‘ஷவ்வால்’ மற்றும் ‘துல்கஃதா’ ஆகிய இரு மாதங்கள் உள்ளன.
-
ரமலான் (9-வது மாதம்)
-
ஷவ்வால் (10-வது மாதம்)
-
துல்கஃதா (11-வது மாதம்)
-
துல்ஹஜ் (12-வது மாதம்)
ரமலானில் தொடங்கி துல்ஹஜ் வரை மொத்தம் 4 மாதங்கள் வருகின்றன.
அறிவியல் ரீதியாக, அடுத்தடுத்து 2 அல்லது 3 மாதங்கள் 29 நாட்களாகக் குறைய வாய்ப்பு இருந்தாலும், தொடர்ச்சியாக 4 மாதங்களும் 29 நாட்களாகக் குறைவது வானியல் ரீதியாக மிகவும் அரிய விசித்திர நிகழ்வாகும் (Extremely Rare Astronomical Event).
இந்த 4 மாதங்களின் சராசரி மொத்த நாட்களைக் கணக்கிட்டால்:
4×29.53059=118.12 நாட்கள்.
இந்த 118.12 நாட்களை நாம் நாட்களாக மாற்றும் போது, குறைந்தபட்சம் 2 மாதங்கள் 30 நாட்களாகவும், 2 மாதங்கள் 29 நாட்களாகவும் பிரிய வேண்டும் (30+29+30+29 = 118 நாட்கள்).
நான்கு மாதங்களுமே 29 நாட்களாக மாற வேண்டுமானால், மொத்த நாட்கள் 116 ஆகக் குறைய வேண்டும் (4×29=116). ஆனால், சந்திரனின் சுழற்சி வேக மாறுபாட்டால் 118 நாட்களிலிருந்து 2 நாட்கள் அளவுக்குக் குறைவது இயற்கையாகச் சாத்தியமற்றது.
எனவே, ரமலான் மாதமும் 29 நாட்களாகக் குறைந்து, அதற்கு அடுத்து வரும் துல்ஹஜ் மாதமும் 29 நாட்களாகக் குறைவது என்பது ஒரே ஆண்டில் பொதுவாக நிகழ்வதில்லை. ஏதாவது ஒன்று குறைந்தால் மற்றொன்று 30 நாட்களாக நிறைவடைந்து அந்த சமநிலையைப் பேணிவிடும்.
ரமலான் 29 ஆக இருந்து, துல்ஹஜ்ஜும் 29 ஆக அமைவது அறிவியல் ரீதியாக மிகவும் அரிதானது.
சந்திர சுழற்சியை வைத்து மாத நாட்களை கணக்கிடும் சுருக்கமான விதிமுறை:
29 நாட்கள் ஆகி + 0 முதல் 11 மணி நேரம் 59 நிமிடத்திற்குள் இருந்தால் = 29 நாட்கள் (Round Down)
29 நாட்கள் ஆகி + 12 மணி நேரம் முதல் 23 மணி நேரம் 59 நிமிடம் வரை இருந்தால் = 30 நாட்கள் (Round Up) என்று கணக்கிடப்படும்.
இதன்படி இந்த 2026 ஆம் வருடத்தின் ரமலான் மாதம்: 29 நாட்கள், 21 மணி நேரம், 17 நிமிடங்கள். (இது 29.5 நாட்களை விட அதிகமாக இருப்பதால், தூய அறிவியல் கணக்கின்படி இந்த ரமலான் 30 நாட்கள் கொண்ட மாதமாகும்).
துல்ஹஜ் மாதம்: 29 நாட்கள், 11 மணி நேரம், 48 நிமிடங்கள். (இது 29.5 நாட்களை விடக் குறைவாக இருப்பதால், தூய அறிவியல் கணக்கின்படி இந்த துல்ஹஜ் 29 நாட்கள் கொண்ட மாதமாகும்).
சமீப விமர்சனங்கள்