தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-692

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் குறையாது என்பது குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும், இந்தச் செய்தி அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா அவர்கள் வழியாக முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமலும் வந்துள்ளது.

“பெருநாட்களைக் கொண்ட இரு மாதங்கள் குறையாது” என்ற இந்த ஹதீஸின் கருத்து “ஒரே வருடத்தில் ரமலான், துல்ஹிஜ்ஜாவின் மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் ஒன்றாகக் குறைந்துவிடுவதில்லை. அவற்றில் ஒன்று குறைந்தால், மற்றொன்று முழுமையாக (முப்பது நாட்களாக) இருக்கும்” என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.

இந்த ஹதீஸின் கருத்து, “இந்த மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும், இவை நன்மையிலும் சிறப்பிலும் குறைவில்லாத முழுமையான மாதங்களே ஆகும்” என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் கூறியுள்ளார். இஸ்ஹாக் அவர்களின் இந்த நிலைப்பாட்டின்படி, ஒரே வருடத்தில் இவ்விரு மாதங்களும் ஒரே நேரத்தில் இருபத்தொன்பது நாட்களாகக் குறைவதற்கும் வாய்ப்புண்டு.

(திர்மிதி: 692)

بَابُ مَا جَاءَ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الحِجَّةِ “

«حَدِيثُ أَبِي بَكْرَةَ حَدِيثٌ حَسَنٌ»، وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا. قَالَ أَحْمَدُ: ” مَعْنَى هَذَا الحَدِيثِ: شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، يَقُولُ: لَا يَنْقُصَانِ مَعًا فِي سَنَةٍ وَاحِدَةٍ شَهْرُ رَمَضَانَ، وَذُو الحِجَّةِ، إِنْ نَقَصَ أَحَدُهُمَا تَمَّ الآخَرُ “، وقَالَ إِسْحَاقُ: ” مَعْنَاهُ لَا يَنْقُصَانِ يَقُولُ: وَإِنْ كَانَ تِسْعًا وَعِشْرِينَ فَهُوَ تَمَامٌ غَيْرُ نُقْصَانٍ «،» وَعَلَى مَذْهَبِ إِسْحَاقَ يَكُونُ يَنْقُصُ الشَّهْرَانِ مَعًا فِي سَنَةٍ وَاحِدَةٍ “


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-692.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




 

 


மேலும் பார்க்க: புகாரி-1912.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.