தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-435

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“மஃக்ரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது. (இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி. பார்க்க: இப்னு மாஜா-1373 )

அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக வரும் மேற்கண்ட செய்தி உமர் பின் அபூ கஸ்அம் ( عمر بن عبد الله بن أبي خثعم) அவரிடமிருந்து ஸைத் பின் ஹுபாப் வழியாகவே வருகிறது. இமாம் புகாரி அவர்கள்  உமர் பின் அபூ கஸ்அம் பற்றி  இவர் நிராகரிக்கப்பட்டவர், மிக பலவீனமானவர் என்று கூற கேட்டுள்ளேன்.

(திர்மிதி: 435)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ يَعْنِي مُحَمَّدَ بْنَ الْعَلَاءِ الْهَمْدَانِيَّ الْكُوفِيَّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الحُبَابِ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ صَلَّى بَعْدَ المَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ فِيمَا بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً»

وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى بَعْدَ المَغْرِبِ عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الجَنَّةِ»: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ الحُبَابِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي خَثْعَمٍ»، وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ: يَقُولُ: «عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي خَثْعَمٍ مُنْكَرُ الحَدِيثِ وَضَعَّفَهُ جِدًّا»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-435.
Tirmidhi-Shamila-435.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-399.




இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் சிலர் மஃக்ரிப், இஷாவுக்கு இடையில் அவ்வாபீன் தொழுகை என்ற பெயரில் ஆறு ரக்அத்களைத் தொழுகிறார்கள். ஆனால் இது மிக பலவீனமான செய்தியாகும்.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31567-உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி, இவர் ذاهب الحديث (அதாவது பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்-நிராகரிக்கப்பட்டவர்) என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் – 4265)
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இந்த உமர் என்பவரை பலவீனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இவரது ஹதீஸ்கள் ஒரு மதிப்பும் இல்லாதவை என்றும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட்டவை என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    கூறுகிறார். இவரது குறையை அம்பலப்படுத்துவதற்காகவே தவிர இவரைப் பற்றி பேசுவது கூடாது; இமாம் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இப்னு அபீ திஅப் உள்ளிட்ட பல நம்பகமானவர்கள் பெயரில் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறுகிறார். (நூல்: நக்துல் மன்கூல்).
  • இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், மிக பலவீனமானவர்கள், அறியப்படாதவர்கள் வழியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் இது மிக பலவீனமான செய்தியாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-1167 , 1374 , திர்மிதீ-435 , முஸ்னத் அபீ யஃலா-6022 , இப்னு குஸைமா-1195 , அல்முஃஜமுல் அவ்ஸத்-819 , 7245 , அல்முஃஜமுஸ் ஸகீர்-900 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1373 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.