தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2579

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2579. உம்மு அதிய்யாரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, உங்களிடம் உண்பதற்கு ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நீங்கள் உம்மு அதிய்யாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது தனது இடத்தை அடைந்து விட்டது என்று கூறினார்கள்.
Book :50

(புகாரி: 2579)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «عِنْدَكُمْ شَيْءٌ»، قَالَتْ: لاَ، إِلَّا شَيْءٌ بَعَثَتْ بِهِ أُمُّ عَطِيَّةَ، مِنَ الشَّاةِ الَّتِي بَعَثْتَ إِلَيْهَا مِنَ الصَّدَقَةِ، قَالَ: «إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.