நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும். யார் அதை ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை குர்ஆன் ஓதிய நன்மையைப் பதிவு செய்கிறான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(திர்மிதி: 2887)حَدَّثَنَا قُتَيْبَةُ، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَا: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّؤَاسِيُّ، عَنْ الحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ هَارُونَ أَبِي مُحَمَّدٍ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَقَلْبُ القُرْآنِ يس، وَمَنْ قَرَأَ يس كَتَبَ اللَّهُ لَهُ بِقِرَاءَتِهَا قِرَاءَةَ القُرْآنِ عَشْرَ مَرَّاتٍ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَبِالبَصْرَةِ لَا يَعْرِفُونَ مِنْ حَدِيثِ قَتَادَةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَهَارُونُ أَبُو مُحَمَّدٍ شَيْخٌ مَجْهُولٌ»
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، بِهَذَا، وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، «وَلَا يَصِحُّ مِنْ قِبَلِ إِسْنَادِهِ وَإِسْنَادُهُ ضَعِيفٌ» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2812.
Tirmidhi-Shamila-2887.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2831.
إسناد ضعيف فيه هارون وهو مجهول (جوامع الكلم)
- இதில் வரும் அபூமுஹம்மத் எனும் ஹாரூன் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸ் என்று திர்மிதி இமாம் அவர்களே இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் கதாதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் இங்கு முகாதில் பின் ஹய்யான் என்று இடம்பெற்றுள்ளது. இவர் நம்பகமானவர்தான். ஆனால் ஆரம்பத்தில் இந்த ஹதீஸை எழுதும் போது முகாதில் பின் ஸுலைமான் என்றுதான் இருந்தது என அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.
முகாதில் பின் ஸுலைமான் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று ஈஸா பின் யூனுஸ், வகீஉ பின் ஜர்ராஹ் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர் என்பதால் அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என்று கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இது எவ்வாறு இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை தனது ளயீஃபா என்ற நூலில் விரிவாக கூறியுள்ளார். (நூல்: ஸில்ஸிலதுள் ளயீஃபா-169 )
- இது போல் யாஸீன் அத்தியாயத்தின் தனிச்சிறப்பு பற்றிய எல்லா ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : தாரிமீ-3459 , திர்மிதீ-2887 , முஸ்னத் பஸ்ஸார்-7282 ,
…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6009 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2889 ,
இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று முஹத்தீஸ் இமாம் நாசருதீன் அல்பானி (ரஹ்) கூறுகிறார்கள்
அல் லைய்ஃபா-169
இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று இமாம் இப்னு அல் ஜவ்ஜி(ரஹ்) கூறினார்கள்
அல் மவ்ளுஉ-2/313
இந்த ஹதீஸ் பலகினமானது என்று இமாம் ஷவ்கானி(ரஹ்) கூறுகிறார்கள்
அல் ஃபவாயித் அல் மஜ்மூ-973
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. தாங்கள் கூறியதின் அடிப்படையில் கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.