தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-663

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

663. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” என்று பதிலளித்தார்கள்.

(பிறகு) எது மிகச் சிறந்த தர்மம்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளான் மாதத்தில் வழங்கப்படும் தர்மம் (மிகச் சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் வரும் ஸதகா பின் மூஸா என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களிடம் அந்த அளவிற்கு பலமானவர் அல்ல.


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ:

سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الصَّوْمِ أَفْضَلُ بَعْدَ رَمَضَانَ؟ فَقَالَ: «شَعْبَانُ لِتَعْظِيمِ رَمَضَانَ»، قِيلَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «صَدَقَةٌ فِي رَمَضَانَ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَصَدَقَةُ بْنُ مُوسَى لَيْسَ عِنْدَهُمْ بِذَاكَ القَوِيِّ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-663.
Tirmidhi-Alamiah-599.
Tirmidhi-JawamiulKalim-599.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

3 . மூஸா பின் இஸ்மாயீல்

4 . ஸதகா பின் மூஸா-அபுல்முஃகீரா, அபூமுஹம்மத்

5 . ஸாபித் பின் அஸ்லம்

6 . அனஸ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19752-ஸதகா பின் மூஸா அத்தகீகீ-அபுல்முஃகீரா என்பவர் பற்றி முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் இப்ராஹீம என்பவர் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இன்னும் பலர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/432, மீஸானுல் இஃதிதால்-3879, தஹ்தீபுத் தஹ்தீப்-2/208, தக்ரீபுத் தஹ்தீப்-1/452)


மேலும் இந்தச் செய்தி முஸ்லிம்-2157 இல் வரும், “ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்” என்ற செய்திக்கு முரணாக உள்ளது.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிகமாக நோன்பு வைத்துள்ளார்கள் என்ற கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன.

பார்க்க: திர்மிதீ-736.


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸதகா பின் மூஸா —> ஸாபித் பின் அஸ்லம் —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9763, திர்மிதீ-663, முஸ்னத் பஸ்ஸார்-6890, முஸ்னத் அபீ யஃலா-3431, ஷரஹ் மஆனில் ஆஸார்-3330, குப்ரா பைஹகீ-8517, ஷுஅபுல் ஈமான்-3539, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-2157, 1357, திர்மிதீ-736, …

 

திர்மிதீ இமாம்

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம்

محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبه الجعفي البخاري

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் அல்முகீரா பின் பர்திஸ்பா

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வம்சம்: அல்ஜுஃஃபீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: புகாரா

பயணித்த ஊர்கள்: புகாரா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, பஃக், ஸமர்கந்த்

பிறப்பு: ஹிஜ்ரி 194, புகாரா

இறப்பு: ஹிஜ்ரி 256, ஸமர்கந்த்

கால கட்டம்: பிந்தைய காலத்தவர்


வாழ்க்கைக் குறிப்பு

புகாரீ இமாம் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 194 ஆம் ஆண்டு புகாராவில் பிறந்தார்கள். அவர்கள் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார். ஹதீஸ் கலையில் உலக இமாமாகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதற்காக முஸ்லிம் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்கள். அவர்கள் தொகுத்த ஸஹீஹ் புகாரீ, குர்ஆனுக்குப் பிறகு மிகவும் நம்பகமான ஹதீஸ் நூலாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஹிஜ்ரி 256 ஆம் ஆண்டு ஸமர்கந்தில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உபைதுல்லாஹ் பின் மூஸா பின் அபில்முக்தார், முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ, ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அன்னபீல், மக்கீ பின் இப்ராஹீம் பின் பஷாயர், அலீ பின் அல்மதனீ, யஹ்யா பின் மஈன், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, ஸயீத் பின் அபீ மர்யம், அஃப்பான் பின் முஸ்லிம், மாலிக் இமாம், குதைபா பின் ஸயீத் பின் ஜமீல், உஸ்மான் பின் முஹம்மத் (அபூ ஷைபா)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ தாவூத், இமாம் திர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹரவீ, முஹம்மத் பின் அஹ்மத் பின் தூலாப், மன்சூர் பின் முஹம்மத் பஸ்தூரீ

வேறு பெயர்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல், இமாம் புகாரீ


ஆதாரம்: muslimscholars.info (30001) · Should verify

மூஸா பின் இஸ்மாயீல்

மூஸா பின் இஸ்மாயீல்-அல்முன்கரீ (ரஹ்) – Musa bin Isma'il al-Munqari

இறப்பு: ஹிஜ்ரி 223, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: மூஸா பின் இஸ்மாயீல்

தந்தை பெயர்: இஸ்மாயீல்

வம்சம்: பனூ முன்கர் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ ஸலமா

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

இறப்பு: ஹிஜ்ரி 223, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

மூஸா பின் இஸ்மாயீல் அல்முன்கரீ ரஹ் அவர்கள் அபூ ஸலமா அத்தபூதகீ என்றும் அறியப்பட்டவர். இவர் மிகப் பலமானவர் ஆவார். பஸராவைச் சேர்ந்த இவர் ஹிஜ்ரி 223 இல் பஸராவில் காலமானார்.

இவர் ஹதீஸ் கலையில் மிகத் துல்லியமானவர்களில் ஒருவராக இருந்தார். இவரைப் பற்றி இமாம் யஹ்யா பின் மயீன் ரஹ் அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபான் பின் யஸீத் அல்அத்தார், ஜரீர் பின் ஹாஸிம், ஜுவைரிய்யா பின் அஸ்மா, ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாம் பின் யஹ்யா, தாவுத் பின் அபில் ஃபூராத், ஸுலைமான் பின் அல்முகீரா, ஸலாம் பின் அபீ முதீஃ, அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல்மாஜிஷூன், அப்துல் வாஹித் பின் ஸியாத், வஹைப் பின் காலித், மஹ்தீ பின் மைமூன்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்புகாரி, அபூ தாவூத், யஹ்யா பின் மயீன், அபூ ஸுர்ஆ, அபூ ஹாதிம், முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, அஹ்மத் பின் ஹஸன் அத்தர்மிதீ, இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அல்ஹர்பீ, இஸ்மாயீல் பின் அப்துல்லாஹ் அஸ்மவீஹி, அஹ்மத் பின் மன்ஸூர் அர்ரமாதி, யஃகூப் பின் ஸுஃப்யான், அபூ பக்ர் அஹ்மத் பின் அம்ர் பின் அபூ ஆஸிம்

வேறு பெயர்கள்: அபூ ஸலமா, மூஸா பின் இஸ்மாயீல் அத்தபூதகீ


ஆதாரம்: muslimscholars.info (20040) · Should verify

ஸதகா பின் மூஸா-அபுல்முஃகீரா, அபூமுஹம்மத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸாபித் பின் அஸ்லம்

ஸாபித் பின் அஸ்லம்-அல்-பனானீ (ரஹ்) – Thabit bin Aslam Albanani

இறப்பு: ஹிஜ்ரி 127

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸாபித் பின் அஸ்லம்

தந்தை பெயர்: அஸ்லம்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

இறப்பு: ஹிஜ்ரி 127

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸாபித் பின் அஸ்லம் அல்-பனானீ ரஹ் ஒரு தாபிஈ ஆவார். இவர் பஸராவைச் சேர்ந்தவர். ஹதீஸ் கலையில் இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் அனஸ் பின் மாலிக் ரலி உட்பட பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் ஹிஜ்ரி 127 இல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் முகஃப்பல், உமர் பின் அபூ ஸலமா, ஷுஐப், அப்துல்லாஹ் பின் ரபாஹ், அப்துர்ரஹ்மான் பின் அபூ லைலா, முத்ரஃப் பின் அப்துல்லாஹ், அபூ ராஃபிஃ அஸ்ஸாஇக், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், பக்ர் பின் அப்துல்லாஹ் அல்முஸனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹுமைத் அத்தவீல், ஷுஃபா பின் அல்-ஹஜ்ஜாஜ், ஜரீர் பின் ஹாஸிம், ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், மஃமர் பின் ராஷித், ஹம்மாம் பின் யஹ்யா, அபூ அவானா அல்-வத்தாஹ், ஜஃபர் பின் ஸுலைமான், ஸுலைமான் பின் அல்-முகீரா, தாவூத் பின் அபூ ஹிந்த், ஸுலைமான் அல்-அஃமஷ்

வேறு பெயர்கள்: ஸாபித் அல்-பனானீ, ஸாபித்


ஆதாரம்: muslimscholars.info (11269) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.