தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11475

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் தொழுபவர்களுக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11475)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ بْنِ مُسَاوِرٍ الْجَوْهَرِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ، ثنا يُوسُفُ بْنُ الْفَيْضِ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ اللهَ تَعَالَى يُنْزِلُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-11313.
Almujam-Alkabir-Shamila-11475.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11320.




إسناد فيه متهم بالوضع وهو يوسف بن الفيض الدمشقي

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49517-யூசுப் பின் ஃபைள் என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    ஆகியோர் கூறியுள்ளனர். துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அவர்கள், இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார். மேலும் பல அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/497, அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/223, லிஸானுல் மீஸான்-8/556)

نا عبد الرحمن قال : سألت أبي عنه فقال : منكر الحديث جدا

الجرح والتعديل لابن أبي حاتم: (9 / 223)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-187)

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11248 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.