தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-21

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள், ”அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் “என்று கூறினார்கள். ”யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். தம் பெற்றோரை முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்யாமல் இருந்து அதன் மூலம்) நரகம் சென்றவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)

(al-adabul-mufrad-21: 21)

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«رَغِمَ أَنْفُهُ، رَغِمَ أَنْفُهُ، رَغِمَ أَنْفُهُ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ؟ قَالَ: «مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبْرِ، أَوْ أَحَدَهُمَا، فَدَخَلَ النَّارَ»


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-21.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-21.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

..


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14656-காலித் பின் மக்லத் பற்றி இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்திகளை கூறிவிட்டு இவற்றில் நான் முன்கரான செய்திகளை காணவில்லை. என் பார்வையில் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1599, தஹ்தீபுத் தஹ்தீப்-1/531, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-595)

  • இந்த செய்தியை வேறுசிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இதில் விமர்சனமில்லை.

மேலும் பார்க்க: முஸ்லிம்-4987 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.