தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-7570

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு (இரண்டு) விடுதலை பத்திரங்கள் எழுதப்படுகின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று  நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவித்தார்.

 

(bazzar-7570: 7570)

حَدَّثنا نصر بن علي، حَدَّثنا أَبُو قتيبة، حَدَّثنا طعمة بن عمرو عَن حَبيب، يَعْنِي ابْنَ أَبِي ثَابِتٍ، عَن أَنَس عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:

من صلى أربعين يوما، أحسبه قال في جماعة -كتب له براءة من النار وبراءة من النفاق.

وَهَذَا الْحَدِيثُ لاَ نعلمُهُ يُرْوَى عَن أَنَس إلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ولاَ نعلمُ رَوَى عَن حَبيب إلاَّ طعمة بن عَمْرو الجعفري


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7570.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




  • இந்த ஹதீஸை பதிவு செய்த பஸ்ஸார் அவர்கள் இது கரீப் – அரிதான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹபீப் பின் அபீ ஸாபித் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதற்கு கூறப்படும் ஹத்தஸனா போன்ற வார்த்தைகள் வரவில்லை.
  • மேலும் இதில் வரும் அறிவிப்பாளர் ஹபீப் பின் அபீஸாபித் என்பவரா, அல்லது ஹபீப் பின் அபீ ஹபீப் அல்பஜலீ என்பவரா என்ற சந்தேகம் உள்ளது. அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஹபீப் பின் அபீ ஸாபித் என்றே முடிவு செய்கிறார்.

மேலும் பார்க்க : திர்மிதீ-241 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.