ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
7570. யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு (இரண்டு) விடுதலை பத்திரங்கள் எழுதப்படுகின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவித்தார்.
حَدَّثنا نصر بن علي، حَدَّثنا أَبُو قتيبة، حَدَّثنا طعمة بن عمرو عَن حَبيب، يَعْنِي ابْنَ أَبِي ثَابِتٍ، عَن أَنَس عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:
من صلى أربعين يوما، أحسبه قال في جماعة -كتب له براءة من النار وبراءة من النفاق.
وَهَذَا الْحَدِيثُ لاَ نعلمُهُ يُرْوَى عَن أَنَس إلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ولاَ نعلمُ رَوَى عَن حَبيب إلاَّ طعمة بن عَمْرو الجعفري
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7570.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இந்த ஹதீஸை பதிவு செய்த பஸ்ஸார் அவர்கள் இது கரீப் – அரிதான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹபீப் பின் அபீ ஸாபித் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதற்கு கூறப்படும் ஹத்தஸனா போன்ற வார்த்தைகள் வரவில்லை.
- மேலும் இதில் வரும் அறிவிப்பாளர் ஹபீப் பின் அபீஸாபித் என்பவரா, அல்லது ஹபீப் பின் அபீ ஹபீப் அல்பஜலீ என்பவரா என்ற சந்தேகம் உள்ளது. அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஹபீப் பின் அபீ ஸாபித் என்றே முடிவு செய்கிறார்.
மேலும் பார்க்க : திர்மிதீ-241 .
சமீப விமர்சனங்கள்