தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3147

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தல்.

அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களில் குர்பானி எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒருவர் தன் சார்பாகவும், தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இன்றைக்கு மக்கள் (இதன் மூலம்) பெருமையடித்துக்கொள்வதை நீங்கள் பார்க்கும் நிலை உருவாகிவிட்டது” என்று விடையளித்தார்கள்.

(இப்னுமாஜா: 3147)

بَابُ مَنْ ضَحَّى بِشَاةٍ، عَنْ أَهْلِهِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيَّادٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، قَالَ:

سَأَلْتُ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ: كَيْفَ كَانَتِ الضَّحَايَا فِيكُمْ، عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «كَانَ الرَّجُلُ فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ، وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ، ثُمَّ تَبَاهَى النَّاسُ، فَصَارَ كَمَا تَرَى»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3138.
Ibn-Majah-Shamila-3147.
Ibn-Majah-Alamiah-3138.
Ibn-Majah-JawamiulKalim-3146.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா (3. பலமானவர்).

2 . அப்துர்ரஹ்மான்-துஹைம்-அல்குரஷீ (2. மிகப் பலமானவர்).

3 . இப்னு அபூ ஃபுதைக்-முஹம்மத் பின் இஸ்மாயீல் (4. நடுத்தரமானவர்).

4 . ளஹ்ஹாக் பின் உஸ்மான்-அபூஉஸ்மான் (4. நடுத்தரமானவர்).

5 . உமாரா பின் அப்துல்லாஹ் பின் ஸய்யாத் (3. பலமானவர்).

6 . அதாஉ பின் யஸார்-அல்ஹிலாலீ (3. பலமானவர்).

7 . அபூஅய்யூப் (ரலி)-அல்அன்ஸாரீ (1. நபித்தோழர்).


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி-ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்களை சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்ற கருத்திலும் கூறியுள்ளனர். இந்தச் செய்தியின் கருத்தை உமாரா அவர்களிடமிருந்து மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களும் அறிவித்துள்ளார். (பார்க்க: மாலிக்-1396)

எனவே இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம்… வேறு பலமான அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தி வந்திருப்பதால் இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தை அடைகிறது.


மேலும் பார்க்க: மாலிக்-1396.

5 comments on Ibn-Majah-3147

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்த ஹதீசிலும், இது சம்பந்தமாக வரக்கூடிய மற்ற அறிவிப்புகளிலும் (மாலிக்-1396, திர்மிதீ-1505) ஹதீஸின் தரம் பற்றிய எந்த விபரமும் இல்லை. தற்போதைய துல்ஹஜ் மாத சந்தேகத்துக்காக தயவுசெய்து இதற்கு உடனே பதில் தர முடியுமா?

    1. வ அலைக்கும் ஸலாம். மாலிக்-1396 இல் வரும் செய்தி பலமானது.

      1. ஜசாக்கல்லாஹ் ஹைரன்.

        திர்மிதீ 1505 – வது ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” என்ற தரத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ்

        இந்த பக்கத்தில் உள்ள (இப்னுமாஜா 3147-வது) ஹதீசின் தரம் பற்றி எந்த குறிப்பும் இல்லையே? இந்த அறிவிப்பும் பலமானதுதானா?

        1. திர்மிதீ 1505 இல் உள்ள அதே அறிவிப்பாளர் ளஹ்ஹாக் பின் உஸ்மான் இதிலும் வருகிறார். இவரிடமிருந்து அறிவிப்பவரும் ஹஸன் தரத்தில் உள்ளவரே. எனவே இதுவும் ஹஸன் ஸஹீஹ் ஆகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.