தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-2323

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

“மனிதனின் உறுப்புகள் அனைத்தும் நாவிடம் (நாவு தவறு செய்வதைத் தடுத்து) நன்மையில் உறுதியாக இருக்கும்படி வேண்டுகின்றன.

‘நீ எங்களுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். நீ நேர்வழியில் இருந்தால், நாங்களும் நேர்வழியில் இருப்போம். நீ கோணலானால், நாங்களும் கோணலாவோம்’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

இதன் அறிவிப்பாளரான ஹம்மாத் பின் ஸைத் அவர்கள், இதை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லாகத்தான் அறிவித்தார்கள் என்று நான் அறிகிறேன் என்று கூறினார்.

(tayalisi-2323: 2323)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ حَمَّادٌ: وَلَا أَعْلَمُهُ إِلَّا مَرْفُوعًا، قَالَ:

الْأَعْضَاءُ تُكَفِّرُ اللِّسَانَ، تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2323.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2309.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கூஃபாவை சேர்ந்த அபுஸ் ஸஹ்பாவை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே
    நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார். (பஸராவை சேர்ந்த ஸுஹைப் அபுஸ்ஸஹ்பா பலவீனமானவராவார்)
  • இவரிடமிருந்து மிக பலமான அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் அறிவித்துள்ளார் என்பதாலும், மேலும் இரு அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பதாலும் அபுஸ் ஸஹ்பா அறியப்படாதவர் என்று கூறமுடியாது.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூஃபாவை சேர்ந்த அபுஸ் ஸஹ்பாவை பலமானவர் என்றும்
    , பஸராவை சேர்ந்த ஸுஹைப் அபுஸ்ஸஹ்பாவை பலவீனமானவர் பட்டியலிலும் சேர்த்துள்ளார். 
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    மக்பூல் தரத்தில் சேர்த்துள்ளார்.


மேலும் பார்க்க: அஹ்மத்-11908.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.