நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் சுப்ஹுடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் நான் தொழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் சொன்ன பிறகு நான் எழுந்து (விடுபட்ட முன்ன சுன்னத்தான) பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளைத் தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
அறிவிப்பவர் : கைஸ் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 1563)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَوَصِيفُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ، بِأَنْطَاكِيَةَ قَالَا: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَيْسِ بْنِ قَهْدٍ:
«أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، وَلَمْ يَكُنْ رَكَعَ رَكْعَتَيِ الْفَجْرِ، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ يَرْكَعُ رَكْعَتَيِ الْفَجْرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيْهِ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-1563.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-1597.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்த பிறகு, அபூ தாவூத்-1267 – வது ஹதீஸை பார்க்கும்படி குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த (அபூ தாவூத்: 1267 – வது) ஹதீஸின் விமர்சனம் இந்த (இப்னு ஹிப்பான்: 1563 – வது) ஹதீஸுக்கும் பொருந்துமா? ஆம் என்றால் இந்த ஹதீஸும் ளஈஃபானதுதானா?
வ அலைக்கும் ஸலாம்.
இப்னு ஹிப்பான்-1563 செய்தியைப் பற்றியும் அபூதாவூத்-1267 இன் அடிக்குறிப்பில் உள்ளது. அனைத்து ஹதீஸ்களையும் இணைக்கும் பக்கத்தில் உள்ள தரமே மற்றவைகளுக்கும் பொருந்தும்.
எனவே மேற்கண்ட செய்தி பலவீனமானதே. (இதை ஹஸன் லிஃகைரிஹீ என்றும் கூறலாம்)
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
ஒரே கருத்தில் வரக்கூடிய பலவீனமான செய்திகளை எல்லாம் சேர்த்து ‘ஹஸன் லிகைரிஹி’ என்று கூறப்பட்டாலும், அந்த செய்தி ஏற்றுக்கொள்ளத் தகுதியற்றது என்பதுதானே சரியானது?
ஹஸன் லிகைரிஹி பற்றி ஹஸன் தர செய்திகள் பற்றிய கட்டுரையைக் காணவும்.
இன்ஷா அல்லாஹ்