அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.
அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 16806)حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ،
أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةً كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتِ الْمَرْأَةُ: مَهْ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ ذَهَبَ بِالشِّرْكِ – وَقَالَ عَفَّانُ مَرَّةً: ذَهَبَ بِالْجَاهِلِيَّةِ – وَجَاءَنَا بِالْإِسْلَامِ. فَوَلَّى الرَّجُلُ، فَأَصَابَ وَجْهَهُ الْحَائِطُ، فَشَجَّهُ، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا. إِذَا أَرَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنْبِهِ حَتَّى يُوَافِى بِهِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَيْرٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16806.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16455.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்) தத்லீஸ் செய்பவர். ஆனால் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்களிடம் இவர் செவியேற்றுள்ளார் என்பதால், ஹஸன் பஸரீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக அறிவிக்கும் செய்தி சரியானவை என இப்னு அப்துல் பர் தனது தம்ஹீத் என்ற நூலில் கூறியுள்ளார்.
(நூல்: )
- சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹஸன் பஸரீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டதை தெளிவுப்படுத்தும் ஹத்தஸனா போன்ற வார்த்தை இல்லையென்பதால் இது முர்ஸல் என்று கூறியுள்ளனர்.
(நூல்: )
- அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளையும் சேர்த்து இது சரியான செய்தி என்று கூறியுள்ளனர். - இதில் வரும் சம்பவத்தை சிலர் மறுத்து, இறுதியில் வரும் கருத்தை சரியென்று கூறியுள்ளனர்.
(நூல்: )
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-16806 , இப்னு ஹிப்பன்-2911 , ஹாகிம்-1291 , 8133 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2396 .
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11842 .
4 . அபூதமீமா அல்ஹுஜமிய்யி (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5315 .
…
இன்ஷா அல்லாஹ் இந்தசெய்தி பற்றி வரும் விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
ஹதீஸ் விமர்சன தகவல்-startime …
சமீப விமர்சனங்கள்