தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17608

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது பாட்டனார் (அபூஸப்ரா என்ற யஸீத் பின் மாலிக்-ரலி) (அவரின் மனைவியின் மூலம்) ஒரு ஆண்குழந்தையைப் பெற்றபோது அதற்கு அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் சூட்டி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (குழந்தைக்கு) என்ன பெயர் வைத்தீர்கள்? என்று கேட்டார்கள். எனது பாட்டனார் அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தேன் எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை. அவருக்கு, அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்ற பெயர் இருக்கட்டும் என்று கூறினார்கள். அவர்தான் என் தந்தை அப்துர்ரஹ்மான்.

(முஸ்னது அஹ்மத்: 17608)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ خَيْثَمَةَ، قَالَ:

وَلَدَ جَدِّي غُلَامًا، فَسَمَّاهُ عَزِيزًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: وُلِدَ لِي غُلَامٌ، قَالَ: «فَمَا سَمَّيْتَهُ؟» قَالَ: قُلْتُ: عَزِيزًا. قَالَ: «لَا، بَلْ هُوَ عَبْدُ الرَّحْمَنِ» . قَالَ: فَهُوَ أَبِي


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17608.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17265.




  • இந்த செய்தி வெளிப்படையில் முர்ஸல் போன்று தெரிந்தாலும் வேறு செய்தியில் கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) தன் தந்தையிடமிருந்து இதை அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும். பார்க்க : அஹ்மத்-17604 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.