அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை தூய்மைப் படுத்துவான். யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அல்லாஹ்வே! உனது (இந்த) அடியாரை மன்னிப்பாயாக! ஏனெனில் இவர் இரவில் உளூவுடன் தூங்கினார் என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13620)حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ السَّدُوسِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُؤَدِّبُ، قَالَا: ثنا عَاصِمُ بْنُ عَلِيٍّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عُتْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
طَهِّرُوا هَذِهِ الْأَجْسَادَ طَهَّرَكُمُ اللهُ، فَإِنَّهُ لَيْسَ عَبْدٌ يَبِيتُ طَاهِرًا إِلَّا بَاتَ مَعَهُ مَلَكٌ فِي شِعَارِهِ لَا يَنْقَلِبُ سَاعَةً مِنَ اللَّيْلِ إِلَّا قَالَ: اللهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13620.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13455.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்பாஸ் பின் உத்பா (அறியப்படாதவர் என்ற வகையில்) பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-1051 .
சமீப விமர்சனங்கள்