தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-1051

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் தூக்கத்திலிருந்து விழிக்கும் பொழுது அல்லாஹ்வே! உனது (இந்த) அடியாரை மன்னிப்பாயாக! ஏனெனில் இவர் இரவில் உளூவுடன் தூங்கினார் என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 1051)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ ذَرِيحٍ بِعُكْبَرَا، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الْحَسَنِ بْنِ ذَكْوَانَ، عَنْ سُلَيْمَانَ الْأَحْوَلِ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ *، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ فَلَمْ يَسْتَيْقِظْ إِلَّا، قَالَ الْمَلَكُ : اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلَانٍ، فَإِنَّهُ بَاتَ طَاهِرًا»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-1051.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-1064.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்-11936-அல்ஹஸன் பின் தக்வான் அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸை மட்டும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். (பார்க்க: புகாரி-6566)
  • என்றாலும் இவரைப் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் பலவீனமானவர் என்றும்,
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்றும்,
  • ஸாஜீ அவர்கள் இவரின் சில செய்திகள் முன்கரானவை என்றும்,
  • இப்னு ஸாயித் அவர்கள் இவர் தத்லீஸ் செய்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/394)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-1051 , அல்முஃஜமுல் கபீர்-13620 , 13621 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5087 .

கூடுதல் தகவல்: almaktaba من بات .

4 comments on Ibn-Hibban-1051

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      அந்த செய்தியும் ஹஸன் பின் தக்வான் வழியாகவே வந்துள்ளது.

  1. அல்ஹஸன் என்பவர் புகாரியிலும் ஒரு ஹதீஸ்கக்கு வருகிறார் என்றால்,அந்த செய்தியும் பலகினமான செய்தியாகதானே மாற வேண்டும்….”ஸஹீஹ் புகாரியில்” அல்ஹஸன் வந்தால் ஸஹீஹ்…”ஸஹீஹ் இப்னு ‌ஹிப்பானில்” அவர் இடம் பெற்றால் அந்த செய்தி பலகினாமா?

    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      1. அல்ஹஸன் பின் தக்வானிடம் தத்லீஸ் செய்பவர் என்ற குறை உள்ளது. புகாரியின் அறிவிப்பில் அபூரஜாவிடம் நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார் என்பதால் அந்தக் குறை இதில் இல்லை.

      2. மேலும் அறிவிப்பாளர்களின் தரங்களையும், அவர்களின் ஹதீஸ்களில் சரியானவை எது? பலவீனமானது எது? என்பதையும் அறிந்தவரான யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் தான் அல்ஹஸனிடமிருந்து அறிவித்துள்ளார் என்பதால் புகாரியின் ஹதீஸ் சரியானதாகும். ஹதீஸ்கலை அறிஞர்களில் யஹ்யா பின் ஸயீத், அப்துர்ரஹ்மான் மஹ்தீ, புகாரீ , இப்னு மயீன், அபூஹாத்திம் அர்ராஸீ போன்றோர் விமர்சிக்கப்பட்டவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்து மற்ற பலமானவர்களும் அவர்களைப் போன்று அறிவித்திருந்தால் அந்த செய்திகளை அறிவிப்பார்கள். அதனடிப்படையில் தான் புகாரி இமாமவர்கள் அல்ஹஸனின் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.