தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4031

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயலாளர்களுமான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க்கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். அது ‘புவைரா’ என்னும் இடமாகும்.

எனவேதான், “நீங்கள் (அவர்களுடைய) பேரீச்சை மரங்களை வெட்டியதும், அதன் வேர்களுடன் வெட்டாது விட்டதும் அல்லாஹ்வின் விருப்பப்படியே நடந்தது. குற்றம் புரிந்தோரை அவன் இழிவுபடுத்துவான்” எனும் (அல்குர்ஆன்: 59:5) இறைவசனம் அருளப்பட்டது.

அத்தியாயம்: 64

(புகாரி: 4031)

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:

«حَرَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ، وَهِيَ البُوَيْرَةُ» فَنَزَلَتْ: {مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ} [الحشر: 5]


Bukhari-Tamil-4031.
Bukhari-TamilMisc-4031.
Bukhari-Shamila-4031.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். சிலர் நிகழ்வுடன், ஸபபுன் நுஸூல்-இறைவசனம் இறங்கிய காரணத்தைக் கூறியுள்ளனர். சிலர் அவ்வாறு கூறவில்லை.


போரில் நடந்துக் கொள்ளும் முறைகளில் அங்குள்ள மரங்களை எரிக்கக்கூடாது என்ற தகவல் சில முர்ஸலான செய்திகளில் வந்துள்ளது. மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் சில மரங்களை எரித்தார்கள் என்றும், சில மரங்களை வெட்டினார்கள் என்றும் வந்துள்ளது.

இதற்கு விளக்கம்:

எதிரிகளின் வீடுகளுக்கு முன்பாக மரம் இருந்ததால் அது எதிரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தது என்பதாலும் இன்னும் சில காரணங்களாலும் தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள். மரங்களை வெட்டுவது அல்லது வெட்டாமல் இருப்பது என்பது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்துக் கொள்ளலாம் என்பதற்கு அல்லாஹ்வின் அனுமதி உள்ளது என்பதையும் (அல்குர்ஆன்: 59:5) இறைவசனத்தின்படி புரிந்துக் கொள்ளலாம்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) 

பார்க்க: … புகாரி-4031, 4884, முஸ்லிம்-3592, 3593, இப்னு மாஜா- 2844, அபூதாவூத்- 2615, திர்மிதீ- 1552, 3302, …


புகாரி-2326, 3021, 4032, முஸ்லிம்-3594, இப்னு மாஜா- 2845, …


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: மாலிக்-1292, புகாரி-3014,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.