தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1812

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது மிகவும் பதட்டமாக காணப்பட்டார். இந்த பதட்டம் ஏன்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

“லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (எனது சகோதரியும்;) நபி (ஸல்) அவர்களின் மனைவி(யுமான) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றதிலிருந்து அவைகளை நான் விடவில்லை. (தற்போது விடவேண்டியது ஏற்பட்டுள்ளதே என்பதால் பதட்டமாக உள்ளேன்) என்று கூறினார்.

(நஸாயி: 1812)

أَخْبَرَنِي يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنِي إِسْمَعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سَمَاعَةَ، عَنْ مُوسَى بْنِ أَعْيَنَ، عَنْ أَبِي عَمْرٍو الْأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، قَالَ:

لَمَّا نُزِلَ بِعَنْبَسَةَ جَعَلَ يَتَضَوَّرُ، فَقِيلَ لَهُ، فَقَالَ: أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَحْمَهُ عَلَى النَّارِ»، فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1812.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1799.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஹஸ்ஸான் பின் அதிய்யா பலமானவர் என்றாலும், இவரைப் பற்றிய தகவலைக் கூறிய புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் எந்த நபித்தோழரிடமும் ஹதீஸைக் கேட்டதாக குறிப்பிடவில்லை.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை தப்உத் தாபிஈன்களில் (தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையில்) சேர்த்துள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-3011, அஸ்ஸிகாத்-6/223)


المستدرك على جامع التحصيل للعلائي (ص: 63)

حسان بن عطية الدمشقي

((لم يسمع من أبي أمامة)) قاله ابن عساكر في ” الأطراف ” انظر: ” الآداب الشرعية ” لابن مفلح (2/ 91)

எனவே தான் இப்னு அஸாகிர் அவர்கள், இவர் அபூஉமாமா (ரலி­) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை என்று  கூறியுள்ளார்.

(நூல்: அல்முஸ்தத்ரக் அலா ஜாமிஇத் தஹ்ஸீல்-63)

تحفة الأشراف بمعرفة الأطراف (4/ 162)

حسَّان بن عطيَّة أبو بكر الشاميُّ، عن أبي أمامة – ولم يسمع منه

மிஸ்ஸீ இமாம் அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-4/162)


تحفة التحصيل في ذكر رواة المراسيل (ص: 66)

حسان بن عَطِيَّة الدِّمَشْقِي روى عَن أبي أُمَامَة وَقيل أَنه لم يسمع مِنْهُ

وَسُئِلَ أَحْمد بن حَنْبَل حسان بن عَطِيَّة سمع من عَمْرو بن الْعَاصِ فَقَالَ لَا

قلت وَذكره ابْن حبَان فِي طبقَة أَتبَاع التَّابِعين فَدلَّ على انه لم يَصح عِنْده سَمَاعه من اُحْدُ من الصَّحَابَة

அபூஸுர்ஆ அல்இராகீ அவர்கள், இவர் அபூஉமாமிடமிருந்து ஹதீஸை அறிவித்ததாக வந்துள்ளது. ஆனால் இவர் அபூஉமாமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இவரை தப்உத் தாபிஈன்களில் (தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையில்) சேர்த்துள்ளார். இதன் மூலம் இவர் எந்த நபித்தோழரிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை என்று தெரிகிறது; இவர் நபித்தோழரிடமிருந்து அறிவிப்பது சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-66)


  • அபூஉமாமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 81 அல்லது 86 அல்லது 90 இல் மரணித்தார் என்றும், ஹஸ்ஸான் பின் அதிய்யா ஹிஜ்ரீ 121 க்கும், 130 க்கும் இடைப்பட்ட காலத்தில் மரணித்தார் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-2/947, 3/396)

  • அன்பஸா பின் அபூஸுஃப்யான் ஹிஜ்ரீ (41 அல்லது) 50 இல் மரணித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-2/434)


இதனடிப்படையில் அபூஉமாமா (ரலி) அவர்களிடமே ஹஸ்ஸான் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் அபூஉமாமா (ரலி) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்ட அன்பஸா பின் அபூஸுஃப்யான் அவர்களிடமும் ஹஸ்ஸான் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.